Advertisment

'முஜிப்பின் சிலைகள் அழிக்கப்பட்டபோது நாங்கள் அழுதோம்': டாக்காவில் எக்ஸ்பிரஸ் நேரடி விசிட்

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸின் கீழ் இடைக்கால அரசாங்கம் - புதிய தலைமை நீதிபதி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது வரை, டாக்காவில் கடந்த ஏழு நாட்கள் சகாப்தத்தின் உண்மையான மாற்றத்தைக் குறிக்கிறது.

author-image
WebDesk
New Update
Mujibur rahman statue

Express in Dhaka: ‘Students brought her down because they felt stifled… but when Mujib’s statues were destroyed, we cried’

சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு வரை, அப்போதைய ஷேக் ஹசீனா அரசாங்கத்திற்கு எதிராக தெருவில் இறங்கிய மாணவர்களில் 19 வயதான ஓபிக் என்பவரும் ஒருவர்.

இன்று, அவர் மீண்டும் சாலைக்கு வந்துள்ளார், இந்த முறை மாணவர் தன்னார்வலராக, டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்கு அடுத்துள்ள பிஸியான ஷாபாக் பகுதியில் போக்குவரத்தை மேற்பார்வையிடுகிறார்.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸின் கீழ் இடைக்கால அரசாங்கம் - புதிய தலைமை நீதிபதி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது வரை, டாக்காவில் கடந்த ஏழு நாட்கள் சகாப்தத்தின் உண்மையான மாற்றத்தைக் குறிக்கிறது.

’நாங்கள் அரசாங்கத்தை அகற்றிவிட்டோம், இப்போது நாங்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டும். என் கால்கள் வலிக்கிறது, ஆனால் மக்களுக்கு சேவை செய்வது எங்கள் பொறுப்பு’, என்கிறார் கட்டிடக்கலை இரண்டாம் ஆண்டு மாணவர். 

மறியல் போராட்டத்தின் போது, தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை எதிர்கொண்ட அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

வேலை வாரத்தின் முதல் நாள், சாலைகள் பரபரப்பாக இருந்தன. தான் காலை 11 மணி முதல் போக்குவரத்து பணியில் இருந்ததாகவும், தூறல் பெய்தாலும் மாலை வரை வேலை செய்ததாகவும் ஓபிக் கூறுகிறார். 

அரசுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக மக்களின் கோபத்துக்கு ஆளான, போலீசார் பணிக்கு வருவதில்லை. 

16 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களாதேஷை ஆட்சி செய்த ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிய கடைசி வார இறுதி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த திங்கட்கிழமை, குழப்பத்தின் அறிகுறிகளை டாக்கா கொண்டுள்ளது.

இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு, டாக்கா சுவரில் எழுத்து மாறிவிட்டது.

மெட்ரோ தூண்களில் கொலையாளி ஹசீனா. நாங்கள் வென்றோம், நீங்கள் எங்கே மறைந்துவிட்டீர்கள் போன்ற கிராஃபிட்டிகள் நிரம்பியுள்ளன. 

ஹசீனா தந்தையும் வங்கதேசத்தின் நிறுவனருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானும் விடுபடவில்லை. டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே, அவரது சுவரோவியம் துண்டு துண்டாக சிதறிக் கிடக்கிறது. தலைநகரின் மையத்தில் உள்ள சில சிலைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள சிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஹசீனாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

"தன் செயல்களை நியாயப்படுத்த ஹசீனா, ஒவ்வொரு தருணத்திலும் அவர் பெயரை பயன்படுத்துவார். அதனால், ஹசீனா மீது உள்ள கோபம், அந்த கும்பலை இதுபோன்ற செயல்களைச் செய்ய வைத்தது,” என்கிறார் விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி.

மாணவர்களின் போராட்டத்தை சில அடிப்படைவாத சக்திகள் இத்தகைய செயல்களுக்கு பயன்படுத்திக் கொண்டதாக டாக்கா பல்கலைக்கழக பேராசிரியர் கூறுகிறார்.

"நாங்களும் போங்கோபோந்துவை மதிக்கிறோம், ஆனால் ஷேக் ஹசீனாவின் நடவடிக்கைகள் மக்களை கோபப்படுத்தியது. அந்த கோபத்தின் வெளிப்பாடாக இது ஒரு தன்னிச்சையான எதிர்வினையாகும், ”என்று மாணவர் அர்சுதா கூறுகிறார், அவர் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள போக்குவரத்தையும் நிர்வகிக்கிறார்.

வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையையும் பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வந்த ஹசீனா, தனது அரசாங்கத்தின் கடைசி தசாப்தத்தில் அவர், எடுத்த சர்வாதிகாரத் திருப்பத்திற்காக இன்று தெருக்களில் வெறுக்கப்படுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான பிஎன்பி-யின் சலாவுதீன் அகமது, ஒன்பது ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்த பிறகு வங்கதேசம் திரும்பினார்.

பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகளை நசுக்கிய பிறகு, அவள் வெல்ல முடியாதவள் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் மாணவர்கள் அவளை கீழே இறக்கினர். மாணவர் போராட்டக்காரர்கள் மீது, அவாமி லீக்கின் இளைஞர் பிரிவு கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் பெண் மாணவிகள் உட்பட பலர், மானபங்கம் படுத்தப்பட்டனர், என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான தஸ்னிம் சித்திக் கூறுகிறார்.

இளம் பெண் மாணவிகள் மீதான தாக்குதல், மாணவர் எதிர்ப்பாளர்களைத் தூண்டிவிட்டு, அவர்களை காவல்துறை மற்றும் அவாமி லீக் சார்பு மாணவர்கள் பிரிவுடன் மோதும் பாதையில் கொண்டு வந்தது. ஆனால் (முஜிப்பின்) சிலைகள் அழிக்கப்பட்டபோது, நாங்கள் அழுதோம்... செயல்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, என்று சித்திக் கூறுகிறார்.

டாக்கா பல்கலைக்கழகத்தில் வரலாறு கற்பித்த பேராசிரியரும், இப்போது தனியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான மெஸ்பா கமால், இது 1969 இல் பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் அயூப் கானின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த மாணவர் போராட்டங்களுக்கு இணையாக உள்ளதாக கூறுகிறார்.

"கிழக்கு பாகிஸ்தானில் அயூப் கான் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார், ஆனால் மக்கள் பேசுவதற்கான உரிமையையும் (தங்கள்) மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் விரும்பினர். ஹசீனாவும் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார், ஆனால் அவர் மாணவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அயூப் கான் காலத்தில் கூட மாணவர்கள் மீது இதுபோன்ற வன்முறை நடந்ததில்லை” என்கிறார் கமல்.

பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே, ஷாபாக் சந்திப்பில், தன்னார்வலர்கள் போக்குவரத்தை நிர்வகிக்கும் மாணவர்களுக்கு, உணவு பாக்கெட்டுகளை விநியோகிக்கின்றனர். 

வானம் இருள் சூழ்ந்ததால், பெண்கள் தன்னார்வலர்களை வீட்டிற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். 

"பெண்கள் இருட்டிய பிறகு வெளியே செல்வது மிகவும் ஆபத்தானது, எனவே நாங்கள் அவர்களை வீட்டிற்குச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்களும் காலையிலிருந்து எழுந்து போக்குவரத்தை நிர்வகித்து வருகின்றனர்,” என்கிறார் ஒரு தன்னார்வலர்.

அருகிலேயே வரிசையாக பூக்கடைகள் உள்ளன, மாலையில் வீசும் காற்று அந்த இடத்தை நறுமணத்துடன் நிரப்புகிறது. ஒரு இளம் ஜோடி வீட்டிற்குச் செல்வதற்கு முன் பூக்களுடன் - செல்ஃபி எடுத்துக்கொள்கிறது… 

Read in English: Express in Dhaka: ‘Students brought her down because they felt stifled… but when Mujib’s statues were destroyed, we cried’

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment