வங்கதேசத்தில் ஏற்பட்ட புதிய வன்முறையில் 14 போலீசார் உட்பட குறைந்தது 91 பேர் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர் என்று உள்ளூர் செய்தித்தாள் புரோதோம் அலோ மேற்கோளிட்டுள்ளது. இது சில்ஹெட்டில் உள்ள இந்திய உதவி உயர் தூதகரத்தை இந்திய நாட்டவரக்ளை விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டதுடன், ஹெல்ப்லைன் எண்ணையும் அறிமுகப்படுத்தியது.
ஆங்கிலத்தில் படிக்க: Bangladesh Protests: At least 91 dead, hundreds injured as protesters clash with ruling party supporters
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்களின் இயக்கம் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் அவாமி லீக், சத்ரா லீக் மற்றும் ஜூபோ லீக் செயல்பாட்டாளர்களுடன் மோதலில் ஈடுபட்டபோது வன்முறை மீண்டும் தொடங்கியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹசீனாவின் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரினர். முன்னதாக ஜூலை மாதம் அரசு வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறையை நிறுத்தக் கோரி மாணவர்கள் தொடங்கிய போராட்டங்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியான வன்முறையாக மாறியது.
வங்கதேசத்தில் இந்த புதிய வன்முறை வெடித்தபோது, “போராட்டங்கள் என்ற பெயரில் நாசவேலை மற்றும் அழிவில் ஈடுபடுபவர்கள் இனி மாணவர்கள் அல்ல, குற்றவாளிகள்” என்று ஹசீனா கூறினார். மேலும், மக்கள் அவர்களை இரும்புக் கரங்கள் கொண்டு சமாளிக்க வேண்டும் என்று கூறினார். வங்கதேசத்தில் திங்கள் முதல் புதன்கிழமை வரை அரசு விடுமுறை அறிவித்தார். நீதிமன்றங்கள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமை மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. அதே நேரத்தில், பிராட்பேண்டில்கூட பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட செய்தியிடல் பயன்பாடுகளை அணுக முடியவில்லை.
வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து இந்தியா ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனது குடிமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள இந்திய குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் அவர்களின் அவசர தொலைபேசி எண்களுடன் தொடர்பில் இருக்கவும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் அவசர தொலைபேசி எண்களை வெளியிட்டது: +8801958383679 +8801958383680 +8801937400591
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“