scorecardresearch

மன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட அந்த 7 கேள்விகள்…. பதில் சொன்னாரா மன்மோகன்???

ஊமை பிரதமர் என்று உங்களை பிஜேபினர் அழைத்துள்ளனர் அது பற்றி

மன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட அந்த 7 கேள்விகள்…. பதில் சொன்னாரா மன்மோகன்???

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  பெண்கள் பாதுகாப்பு,  பண மதிப்பிழப்பு  நடவடிக்கை  என அடுத்தடுத்த சர்ச்சைகளால் வீழ்ந்த பாஜக புகழ்  இனிமேல்  இந்தியாவில் ஓங்க போவதில்லை என்று தெரிவித்து வருகிறார்.

ஆங்கில நாளிதழான ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ க்கு மன்மோகன் சிங் அளித்துள்ள முழு பேட்டி தமிழில்…

கேள்வி 1.  கத்துவா வழக்கில் 2 பாஜக அமைச்சர்கள் ராஜினமா செய்துள்ளனர். அது பற்றி?

பதில்:   எனக்கு அபாரமான அறிவு இல்லை. ஆனால்,  அந்த அமைச்சர்கள் இருவரும்  அவர்களின் தலைமைக்கு கட்டுப்பட்டு தான் இதை செய்தார்கள்.  தெரியவில்லை மேலிடம் அவர்களிடம் என்ன கூறியது என்று யாருக்கு தெரியும்.

கேள்வி 2. கடந்த சில ஆண்டுகளாக சிறு பான்மையினர் மற்றும் தலித்துக்களின் மீது நடத்தப்படு வன்முறை குறித்து?

பதில்:  வெட்ககேடானது.  சமீபத்தில் சண்டிகரில் நடைப்பெற்ற கூட்டத்தில் கூட இதைப்பற்றி கூறியிருந்தேன்.  சிறுபான்மையினர், தலித்துக்கள், பெண்கள் இவர்கள் மூவர் மீது நடத்தப்படும்  வன்முறைகள் கண்டிக்கத்தக்கது.  இந்தியாவில் இவர்கள் மூவரும் வாழுவதற்கான சூழ்நிலையே தற்போது மாறியுள்ளது.

கேள்வி 3:  தற்போது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் வங்கி ஊழல் குறித்து? 

பதில்: டிஜிட்டல் இந்தியாவில் வங்கித் துறை நல்ல முறையில் செயல்படவில்லை என்பதற்கு இதுவே ஒரு சான்று. இது தனிப்பட்ட பிரச்சனை இல்லை. பொது பிரச்சனை. இந்தியாவின் 2 ஆவது மிகப்பெரிய வங்கியே இத்தகைய செயலில் ஈடுப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. வெளிப்படையாக இது வங்கி வங்கித் துறை திருத்தியமைக்கப்பட வேண்டிய ஒரு பிரதிபலிப்பு என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி 4 :  கத்துவா விவகாரத்தில் முதலமைச்சர் மெகபூஹா  சரியாக செயல்படுவாரா?

பதில்:  முதலமைச்சர் மெகபூஹாவால் இந்த விவகாரத்தை  இன்னும் கூட தீவிரமாக செயல்படுத்த முடியும். ஆரம்பத்திலியே அவர் இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தி உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமை தாங்குகிறார். எனவே, கூட்டணியின் தலைவர் என்ற முறையில், எந்தவொரு நேரத்திலும் எந்த இழப்பும் இன்றி குற்றவாளியை அவர் தண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி 5 :  மோடி அரசால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியுமா?

பதில்:  20 மாநிலங்களில் பிஜேபி அதிகாரத்தில் உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக கையாளுவது மாநில அரசாங்கங்களின் பொறுப்பாகும். எனவே, பா.ஜ.க. அரசு, சட்ட ஒழுங்கை முறையாக  அமல்படுத்தி, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கலாம்.

கேள்வி 6 கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரத்தில் மோடியின்  மவுனத்திற்கு  எழுந்த எதிர்ப்புகள் குறித்து?

பதில்:   எதிர்ப்பார்த்த ஒன்று. இந்த விவகாரத்தில் அவர் என்னிடம்  வந்து பாடம் கற்க வேண்டும். என் அறிவுரையும் ஏற்க வேண்டும். மோடி அடிக்கடி என்னை சுட்டிக்காட்டுவது, நான் பேசாத முன்னாள் பிரதமர் என்று, ஆனால் அதே சமயத்தில் எந்த இடத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் நான் பேசுவேன். அதை அவரே நேரில் பார்த்து இருக்கிறார்.

கேள்வி 7:  ஊமை பிரதமர் என்று உங்களை பிஜேபினர் அழைத்துள்ளனர் அது பற்றி?

பதில்: அவர்களின் இந்த கருத்தினால் தான் நான் நீண்ட காலமாக அரசியலில் வாழ்ந்து வருகிறேன்.

 

 

 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Banking sector not in good shape needs to be overhauled manmohan singh