Advertisment

வயநாடு நிலச்சரிவு; அரசு நிவாரண நிதியில் வங்கிகள் இ.எம்.ஐ வசூல்: பினராயி விமர்சனம்

கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததோடு, ஒட்டுமொத்த கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கின.

author-image
WebDesk
New Update
kerala cm

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிவாரண நிதியில் இருந்து வங்கிகள் அவர்கள் வாங்கிய கடனுக்கான இ.எம்.ஐ -ஐ வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், கேரள முதல்வர்  பினராயி விஜயன், இதற்கு விமர்சனம் செய்துள்ளார். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின்  கடனை தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

Advertisment

வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததோடு, ஒட்டுமொத்த கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கின. பெருமளவிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வயநாடு பேரழிவைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்க கூட்டப்பட்ட மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டத்தில், மாநில அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு வங்கிகள் துணை நிற்க வேண்டும் என்றும், தாங்கள் வழங்கிய கடனை அரசு திருப்பிச் செலுத்தும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றும் விஜயன் கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்க:    Banks use Wayanad relief funds to cut EMIs, face criticism from Kerala CM

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 அரசு வழங்கியது. இந்நிலையில் சூரல்மாலாவில் உள்ள கேரள கிராமின் வங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நிதியில் இருந்து  இ.எம்.ஐ தொகையை டெபிட் செய்துள்ளது. இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment