Advertisment

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா; தமிழக ஆளுநராக இருந்தவர்

author-image
WebDesk
New Update
banwarilal purohit

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (கோப்பு புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பஞ்சாப் கவர்னர் பதவியை பன்வாரிலால் புரோகித் தனிப்பட்ட காரணங்களுக்காக சனிக்கிழமை ராஜினாமா செய்தார். பன்வாரிலால் புரோகித் ஆகஸ்ட் 2021 முதல் ஆளுநராக பதவி வகித்து வந்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Banwarilal Purohit resigns as Punjab Governor citing ‘personal reasons’

எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகள் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து அதை ஏற்றுக்கொண்டு ஆவண செய்யுங்கள்என்று பன்வாரிலால் புரோஹித் தனது ராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு எழுதினார்.

நாக்பூரில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக (காங்கிரஸிலிருந்து இரண்டு முறை மற்றும் பா.ஜ.க.,விலிருந்து ஒரு முறை) தேர்வான பன்வாரிலால் புரோஹித், முன்பு தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் மாநில ஆளுநராக பணியாற்றினார். பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்துடன் நீண்ட காலமாக வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்த பன்வாரிலால் புரோகித், மாநிலம் தொடர்பான பல பிரச்சனைகளில் விளக்கம் கேட்டு முதல்வர் பகவந்த் மானுக்கு தொடர்ச்சியான கடிதங்களை அனுப்பினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Punjab Banwarilal Purohit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment