Amil Bhatnagar
Bareilly girl infant buried and found alive : கடந்த வியாழக்கிழமை அன்று இறந்து போன தங்களின் குழந்தையை அடக்கம் செய்ய சென்றுள்ளனர் பரேய்லியை சேர்ந்த தம்பதிகள் ஹித்தேஷ் சிரோஹி மற்றும் வைஷாலி. அவர்களின் குழந்தையை அடக்கம் செய்ய குழி தோண்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அருகில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டும் அனைவரும் திடுக்கிட்டனர். சத்தம் வரும் இடத்தை நோக்கி ஊழியர் ஒருவர் ஓட, வாட்ச்மேனிடம் ஒருவர் சென்று யார் அங்கே வந்தார்கள் என்று விசாரிக்க துவங்கினார்.
அருகில் சென்று பார்த்த போது அங்கே ஒரு மண்பானை முகடு தட்டுப்பட்டது. அதனை கவனமாக தோன்றி எடுத்த போது சுவாசத்திற்காக போராடிய நிலையில் ஒரு பெண்குழந்தை இருந்தது. பிறந்த சில நாட்களே ஆன அக்குழந்தையை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் தங்களின் குழந்தையை புதைக்க வந்த தம்பதியினர்.
மேலும் படிக்க : பச்சிளங்குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவம் : உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் ரவி கண்ணா. அவர் இது குறித்து கூறுகையில் குழந்தை வெறும் 1.2 கிலோ கிராம் எடை தான் கொண்டுள்ளது. சில மணி நேரங்களாக பால் குடிக்கமால் இருந்ததால் குழந்தையின் டீ-ஹைட்ரேட் அடைந்திருக்கிறது என்று கூறினார். மருத்துவமனையில் அனுமதித்த நாளில் இருந்து தற்போது வரை 65 கிராம் எடை அதிகரித்துள்ளது. அந்த குழந்தையை அனுமதிக்கும் போது ரத்த தட்டுக்களின் அளவு இயல்பைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருந்தது.
"1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்க வேண்டிய ரத்த தட்டுகள் வெறும் 10 ஆயிரம் என்ற அளவில் தான் இருந்தது. ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சிகிச்சை தரப்பட்டு வருகிறது, மயானத்தில் இருந்து மீட்கப்பட்டதால் பாக்டீரியா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆண்டி-பாக்டீரியல் மருந்து அளிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தைக்கு 25 கிராம் வரை பால் உணவாக அளிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார் மருத்துவர் ரவி கண்ணா
காவல்துறை விசாரணை
குழந்தையை விட்டுச் சென்றவர் துணையற்ற பெண்ணாக தான் இருக்க முடியும். பெரெய்லி முழுவதும் இந்த குழந்தையின் தாய் யார் என்பதை அறிய முயற்சி செய்து வருகிறோம் என்று பெரெய்லியின் காவல்த்துறை கண்காணிப்பாளர் அபிநந்தன் அறிவித்துள்ளார். குழந்தை மீட்கப்பட்டவுடன் அரசு மருத்துவமனையின் பெண்கள் சிகிச்சை பிரிவில் 30 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தான் ரவி கண்ணாவின் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்றும் அறிவித்திருக்கிறார். குழந்தையின் தாய் மீது கொலை முயற்சி (ஐ.பி.சி. 307) மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தையை நிராதரவாக விட்டுச் செல்லுதல் (ஐ.பி.சி 317) போன்ற சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ செலவை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ
இந்த குழந்தைக்கான மருத்துவ செலவு அனைத்தையும் அந்த தொகுதி எம்.எல்.ஏ ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். “இந்த ஊரில் எல்லைச் சுவர் இல்லாததால் யார் உள்ளே வருகிறார்கள், யார் வெளியே செல்கிறார்கள் என்பது அறிய முடியாததாகவே இருக்கிறது. அக்னி பரீட்சைக்கு பின்பு மீண்டு வந்த சீதை போன்றவள் அக்குழந்தை. அவள் இந்த சிகிச்சையில் இருந்து நிச்சயமாக மீண்டு வருவாள். அவளின் மருத்துவ செலவை நான் ஏற்றுக் கொண்டேன். அதே போன்று அவள் நன்றாக படிக்க வேண்டும். அதற்கான செலவையும் நானே ஏற்றுக் கொள்வேன்” என்று
தங்களின் இறந்த குழந்தையை புதைக்கச் சென்ற ஹித்தேஷ் சிரோஹி மற்றும் வைஷாலி தம்பதியினருக்கு இக்குழந்தை ஆறுதலாக இருக்கிறார். எங்கள் குழந்தையை புதைக்கச் சென்றோம். அங்கே ஒரு குழந்தையின் உயிர் காக்கப்பட்டது என்று நெகிழ்ச்சியுடன் அறிவித்தார் வைஷாலி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.