எடியூரப்பாவின் தேர்வு – பிரச்சனைகளை தீர்க்கும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பசவராஜ் பொம்மை

அவர் ஒரு அமைதியான, புத்திசாலியான முதல்வர் என்றும், ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன்பு பிரச்சனை குறித்து முழுமையாக அறிந்து கொள்ள விரும்பும் நபர் அவர் என்றும் பலர் கூறியுள்ளனர்.

B S Yediyurappa, Basavaraj Bommai

 Johnson T A 

Basavaraj Bommai : பி.எஸ்.எடியூரப்பா முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 2013ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இருந்து வெளியேறினார். ஆனால் பசவராஜ் பொம்மை தன்னுடைய தலைவரை பின்பற்றி கர்நாடகா ஜனதா கட்சியில் சேரவில்லை.

அன்றைய சட்டமன்ற தேர்தலுக்காக பசவராஜ் பொம்மையின் தொகுதியான வடக்கு கர்நாடகாவில் உள்ள சிக்கௌனில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பி.எஸ்.எடியூரப்பா, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது பசவராஜ் தன்னை தனியே விட்டுச் சென்றதாக கூறினார்.

கட்சியில் இருந்து விலகுதல் தொடர்பான முடிவில் அவர் தெளிவாக இல்லை. என்னுடன் அவர் கட்சியில் இருந்து வெளியேறவில்லை. மற்றவர்களையும் அவர் கட்சியில் இருந்து வெளியேறவிடாமல் தடுத்து நிறுத்தி என்னை எமாற்றிவிட்டார். துரோகங்கள் செய்வதில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார் என்று எடியூரப்பா கூறினார்.

Basavaraj Bommai

திங்கள் கிழமை அன்று, எடியூரப்பா தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் செவ்வாய் அன்று, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பசவராஜ் பொம்மையை கர்நாடகாவின் முதல்வராக அறிவிக்க தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார் எடியூரப்பா.

பாஜகவின் சித்தாந்தங்களில் வளராத பசவராஜ் பொம்மை 1988 ல் ராமகிருஷ்ணா ஹெட்ஜால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஜனதா கட்சியின் தலைவரான அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிய சோசலிச பாதையில் செல்பவர். அந்த அரசாங்கம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபுகழ்பெற்ற எஸ் ஆர் பொம்மை vs யூனியன் ஆஃப் இந்தியா என்ற வழக்கிற்கு வழி வகை செய்தது. இது பெரும்பான்மையைக் கண்டறிவதற்கான விதிமுறைகளை வகுத்து, மாநில அரசாங்கங்களை கலைப்பதை தவிர்க்க உதவியது.

அவருடைய ஒத்துப்போகும் இயல்பு தான் அவரை புதிய முதல்வராக தேர்வு செய்வதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இலக்கை அடைவதற்கு அவர் செல்லும் எல்லைகளும் காரணமாக அமைந்துள்ளது என்றும் பலர் கூறியுள்ளனர். அவர் ஒரு அமைதியான, புத்திசாலியான முதல்வர் என்றும், ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன்பு பிரச்சனை குறித்து முழுமையாக அறிந்து கொள்ள விரும்பும் நபர் அவர் என்றும் பலர் கூறியுள்ளனர்.

டாட்டா மோட்டர்ஸில் பணியாற்றிய முன்னாள் பொறியாளரான அவர் கர்நாடகாவில் உள்ள மற்ற கட்சியினர் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். முக்கிய பிரச்சினைகள் மற்றும் மசோதாக்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் அவருடைய திறனை கருத்தில் கொண்டு எடியூரப்பா தனது சமீபத்திய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்த காலத்தில் வரைவு செய்யப்பட்டார்.

சட்டமன்றத்தில் விவாதங்கள் சூடுபிடிக்கும் போது பசவராஜின் அமைதியான தலையீடு பிரச்சனைகள் அதிகரிப்பதை தவிர்த்துள்ளது. அவரின் அரசியல் வாழ்விற்கு அடித்தளமிட்ட சோசிலிச தோற்றங்களுக்கு பொருந்தாதவையாக இருந்த போதிலும் உள்துறை அமைச்சராக, மத்திய அரசு வகுத்துள்ள கொள்கை வழிகளைப் பின்பற்ற மாநில அரசு தயாராக உள்ளது என்பதைக் காட்ட ஆர்வமாக இருந்தார்.

லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த இவர், 2008ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்பு எடியூரப்பாவால் பாஜகவிற்கு அழைத்துவரப்பட்டார். ஜனதா கட்சி பிளவுபட்டு, ராமகிருஷ்ணா ஹெக்டே, ஜே எச் படேல் மற்றும் எஸ் ஆர் பொம்மை போன்ற முக்கிய தலைவர்கள் காலமானதைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஜனதா தளம் (யுனைடெட்) அரசியல் முக்கியத்துவத்தை இழந்த சமயத்தில் அவருடைய அரசியல் வாழ்க்கை தடம் புரண்ட காலம் அது.

எடியூரப்பாவிடம் இருந்து பிரிந்த 2012 மற்றும் 2014க்கு இடைப்பட்ட காலத்தில் பொம்மை மூத்த தலைவருக்கும் பாஜக மத்திய தலைமைக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் நபராக இருந்தார். மாநில அரசைப் பொறுத்தவரை, பொம்மை கடந்த காலங்களில் நீர்வள அமைச்சராக பணியாற்றியதோடு, அண்டை மாநிலங்களுடன் கர்நாடகா கொண்டிருக்கும் நீர் பகிர்வு பிரச்சினைகள் குறித்து ஆழமான புரிதலைக் கொண்டவர்.

எவ்வாறு இருப்பினும், கட்சி தலைமையை திருப்திப்படுத்த அதிகம் வளையும் நபர் என்று அவர் குறித்து தங்களின் கருத்துகளையும் தெரிவித்துள்ளனர் மூத்த தலைவர்கள். காவல்துறையில் ஊழல்கள் நிறைந்துள்ளது என்ற புகார்கள் மற்றும் உள்துறை அமைச்சகம் சிறப்பாக செயல்படவில்லை என்ற புகார்களும் உள்ளன. தனிப்பட்ட வாழ்வில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்துபோன அவருடைய நாயை நினைத்து துன்பத்தில் இருந்தவர், தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை எடுத்து வைத்திருந்தார்.

கர்நாடகாவில் பாஜகவை வழிநடத்தப் போவது யார்? எடியூராப்பாவின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Basavaraj bommai bsy personal pick is key trouble shooter with friends across parties

Next Story
கர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express