Advertisment

பெண் அதிகாரிகளுக்கான உடல் திறன் சோதனையில் முக்கிய மாற்றம்: ராணுவம் அறிவிப்பு

ராணுவத்தில் உயர் வயதுடைய பெண்கள் ராணுவ சேவையிலிருந்து வெளியேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையா இது? என்று கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெண் அதிகாரிகளுக்கான உடல் திறன் சோதனையில் முக்கிய மாற்றம்: ராணுவம் அறிவிப்பு

ராணுவத்தில் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் கேடட்கள்  நடத்தப்படும் போர்க்கள உடல் திறன் சோதனை (பிபிஇடி) தொடர்பான தனது கொள்கையை ராணுவம் மாற்றியமைத்தது. அதன் அடிப்படையில், 2009-க்குமுன்னர் நியமிக்கப்பட்ட மற்றும் 35 வயது கடந்த பெண் அதிகாரிகளுக்கும் இனி போர்க்கள உடல் திறன் சோதனை கட்டாயம் என ராணுவம் தெரிவித்தது.

Advertisment

இதுதொடர்பாக, கடந்த மே 12 அன்று புதுடெல்லி ராணுவ தலைமையகத்தில் அமைந்துள்ள ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி (டிஜிஎம்டி) வெளியிட்ட  வழிகாட்டுதல்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகியது.

பொதுவாக, இராணுவப் பணிகளை மேற்கொள்ள இருக்கும்  ராணுவ அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் உடல் தகுதியை அளவிடுவதற்கான ஒரு தொடர்ச்சியான சோதனையாக  இந்த போர்க்கள உடல்திறன் சோதனை அமைந்துள்ளது.

5 கி.மீ ஓட்டம், 60 மீட்டர் ஸ்பிரிண்ட், செங்குத்து கயிற்றை ஒரு குறிப்பிட்ட உயரம் வரை ஏறுதல், கிடைமட்ட கயிற்றை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கடந்து 6 அடி பள்ளத்தில் குதித்தல் போன்ற உடற்தகுதி சோதனைகள் பெண் அதிகாரிகளுக்கு நிர்வகிக்கப்படுகிறது.

அனைத்து ராணுவ அதிகாரி பயிற்சி மையங்களிலும், அனைத்து ஆயுதம் மற்றும் சேவை ரெஜிமென்ட் மையங்களிலும் உள்ள அனைத்து வகை பெண் அதிகாரிகளுக்கும் இந்த தரநிலைகள் பொருந்தும் என்று அந்த வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த, மார்ச் 2011 ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில், ஏப்ரல் 2009 க்கு முன்னர் நியமிக்கப்பட்ட மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண் ராணுவ அதிகாரிகளுக்கு போர்க்கள உடல் திறன் சோதனையில் இருந்து (பிபிஇடி) விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு உடல் திறன் சோதனை (பிபிடி) மட்டுமே நடத்தப்பட்டது .

புதிய வழிகாட்டுதலின் படி, 30 வயதிற்குட்பட்ட பெண் அதிகாரிகளுக்கு 5000 அடி/1500 மீட்டர் ஓட எடுக்கும் நேரம் - 30 நிமிடங்களுக்கு குறைவாக இருந்தால் 'சிறப்பு' என்றும், 31 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகளாக இருந்ந்தால் 'நன்று' என்றும்; 33 நிமிடங்கள் இருந்தால் 'திருப்தி' என்று  மதிப்பிடப்படுகிறது. ஆனால், பழைய வழிகாட்டுதலில் ( 2011), 32 நிமிடங்கள் ‘சிறப்பு’ என மதிப்பிடப்பட்டது;  33 நிமிடங்கள் 30 வினாடிகள் இருந்தால் ‘நன்று ’ என்றும், 35 நிமிடங்கள் இருந்தால் ‘திருப்தி’ என நிர்ணயிக்கப்பட்டது.

5000 அடி முதல் 9000 அடி வரை உயரத்தில் ஓடுவதற்கான உடல் சோதனையிலும் இதே போன்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 60 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் ‘சிறந்த’ மதிப்பீடாக நிர்ணய நேரம் 16 வினாடிகளிலிருந்து 15 வினாடிகளாக குறைக்ககப்பட்டுள்ளது. ‘நன்று’ என்ற  மதிப்பீட்டிற்கு 19 வினாடிகளிலிருந்து 17 வினாடிகளாகவும், ‘திருப்தி' என்ற மதிப்பீட்டடிற்கு 20 வினாடிகளிலிருந்து 19 வினாடிகளாகவும் நிர்ணய நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

களத்தில் இறங்கி நேரடியாக சண்டையிடுதல் அல்லாத பணிகளில் (non combative roles) பெண்களை நிரந்தர கட்டளைப் பணியில் ஈடுபடுத்தலாம் (permanent commission) என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பின், ராணுவ போர் வியூக கல்லூரியில் ஜூனியர் கமாண்ட் (ஜே.சி) பாடத்திட்டத்தை லெப்டினன்ட் கர்னல் தரவரிசை பெண் அதிகாரிகளுக்கும் விரிவுபடுத்தியது. இந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை கல்லூரியில் நடத்தப்படும் பாடத்திட்டங்களில் கலந்து கொள்ளுமாறு பெண் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பொதுவாக, 5-10 ஆண்டுகள் வரை ராணுவ சேவையில்  ஈடுபட்ட ஆண் அதிகாரிகள் மட்டுமே இந்த பாடத்திட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போது 15 முதல்16 வருட ராணுவ சேவையில் ஈடுபட்ட மூத்த பெண் அதிகாரிகளும் இந்த பாடத்திட்டத்தில் கொள்ள முடியும்.

உச்சநீதிமன்ற உத்தரவின் விளைவாக, நிரந்தர கட்டளைப் பணிக்கு கருதப்படும் ராணுவ பெண் அதிகாரிகள், ஜூனியர் கமாண்ட் பாடத்திட்டத்துடன் அந்தந்த ராணுவப் துறையில்  உள்ள கட்டாய படிப்புகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி கேட்டுக் கொண்டார்.

இராணுவ தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கர்னல் பதவிக்கு பதவி உயர்வு பெறுவதற்கு, ஜூனியர் கமாண்ட் பாடத்திட்டம் கட்டாய தேவை என்பதால் இது செய்யப்படுகிறது என்று கூறினார்.

பெயர் தெரிவிக்க விரும்பாத பெண் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 35 வயதுக்கு மேற்பட்ட பெண் அதிகாரிகளும் போர்க்கள உடல் திறன் சோதனை (பிபிஇடி) சோதனைக்கு உட்படுத்துவது நியாயமற்றது என்று பதிலளித்தார்.

ராணுவத்தில் பெண்களை நிரந்தர கட்டளைப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கிய பின்னர் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2011ம் வருட  வழிகாட்டுதல்கள் காரணமாக, பிபிஇடி சோதனைக்கு உட்படுத்தாத உயர் வயதுடைய பெண்கள்  ராணுவ சேவையிலிருந்து வெளியேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையா இது? என்றும் அவள் கேள்வி எழுப்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment