பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் 26.46% வாக்குகளைப் பெற்றன. இது பாஜக-அப்னா தளம் (சோனெலால்) கூட்டணி பெற்ற 51.18% வாக்குகளில் கிட்டத்தட்ட பாதி அளவு வாக்குகள்.
80 மக்களவை இடங்களைக் கொண்ட உத்தரபிரதேசம் முக்கிய போர்க்கள மாநிலமாக எதிக்கட்சிகளைத் தீர்மானிக்கும். அவற்றில் பல கட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை பாட்னாவில் ஒரு கூட்டுக் கூட்டத்தை நடத்தியது. இந்த கட்சிகள் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் மத்தியில் பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வெளியேற்ற விரும்புகின்றன. அரசியல் கணக்கு எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இல்லை என்று தெரிகிறது.
கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலில் - 2014-ம் ஆண்டில் 71 தொகுதிகளையும் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 62 தொகுதிகளையும் பா.ஜ.க பெற்றது - பாட்னா கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு ட்வீட்டில் பா.ஜக மிகப் பெரிய இடங்களைப் பெற்றுள்ளது, பஹுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) தலைவர் மாயவதி பதிவிட்ட ஒரு ட்வீட்டில், அவர்கள் வெற்றி பெற என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்று எதிர்க்கட்சிகளின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கினார். எதிர்க்கட்சிகளின் அடுத்த பெரிய கூட்டம் காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் நடக்க உள்ளது. அந்த மாநிலத்தில் நான்கு மக்களவை இடங்கள் மட்டுமே இருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் இப்போது தேர்தல் வாக்கு சதவீத கணக்கு எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.
பாட்னா கூட்டத்தில் இருந்த கட்சிகளில், சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி) 2019-ம் ஆண்டு தேர்தலில் பி.எஸ்.பி உடன் கூட்டணி அமைத்ஹ்டு போட்டியிட்டபோது அக்கட்சி 18.11% வாக்குப் பங்கைக் கொண்டிருந்தது. காங்கிரஸ் 2019-ல் தனியாகப் போட்டியிட்டது, அது 6.36% வாக்குகளைப் பெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் கட்சி (ஆர்.எல்.டி) எஸ்.பி-பி.எஸ்.பி கூட்டணியின் ஒரு பகுதியாகவும் அதன் வாக்குப் பங்கு 1.68% ஆகவும் இருந்தது.
பாட்னா கூட்டத்தை நடத்திய ஐக்கிய ஜனதா தளம் உ.பி.யில் குறைந்தபட்ச இருப்பைக் கொண்டுள்ளது, அக்கட்சி 0.01% வாக்குகளைப் பெற்றது. எஸ்.பி. தலைவர் அகிலேஷ் யாதவின் மாமா சிவ்பால் சிங் யாதவ் மிதந்த பிராகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) 0.3% வாக்குகளைப் பெற்றது. இது ஃபிரோசாபாத்தில் எஸ்.பி தோல்விக்கு பங்களித்தது. கடந்த ஆண்டு, சிவ்பால் தனது கட்சியை எஸ்.பி-யுடன் இணைத்தார். எதிர்க்கட்சி கூட்டத்திற்கு அழைக்கப்படாத பகுஜன் சமாஜ் கட்சி, மக்களவைத் தேர்தலை இந்த நேரத்தில் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மாயாவதி தலைமையிலான கட்சி 2019-ல் 19.42% வாக்குகளைப் பெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகள் சேர்க்கப்பட்டால், அது 26.46-க்கு வருகிறது. பாஜக-அப்னா தளம் (சோனெலால்) கூட்டணி பெற்ற 51.18% வாக்குகளில் கிட்டத்தட்ட பாதி. பா.ஜ.க மட்டும் 49.97% வாக்குகளைப் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் 2019 புள்ளிவிவரமும், எதிர்க்கட்சிகளின் வாக்குப் சதவீதமும் பா.ஜ.க-வை விட குறைவாக உள்ளது.
2014-ம் ஆண்டு தேர்தலில், எஸ்.பி., பி.எஸ்.பி மற்றும் ஆர்.எல்.டி கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. அவற்றின் ஒருங்கிணைந்த வாக்கு சதவீதம் 42.98% ஆகும். இதனுடன் ஒப்பிடுகையில், பா.ஜ.க மட்டும் 42.63% வாக்குகளைப் பெற்றது. இந்தக் கணக்கு 2018-ல் கோரக்பூர், புல்பூர், மற்றும் கைரேனாவில் உள்ள மக்களவை இடைத்தேர்தல்களில் வெற்றி பெற மூன்று எதிர்க்கட்சிகளையும் 2019-ல் ஒன்றாக வர ஊக்குவித்தது. இவர்களால், பா.ஜ.க-வின் இடங்களின் எண்ணிக்கையை வீழ்த்த முடிந்தது என்றாலும், ஆளும் கட்சியின் வாக்குப் சதவீதம் அதிகரித்தது.
இந்த நேரத்தில், பாஜக தனது அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளான இலவச வீட்டுவசதி, இலவச ரேஷன், கழிப்பறைகள், சுகாதார அட்டைகள், எல்.பி.ஜி இணைப்புகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளின் ஆதரவு வாக்கு வங்கி இருக்கிறது.
"உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற பல்வேறு திட்டங்களில் சுமார் 11 கோடி பயனாளிகள் உள்ளனர். கணிசமான எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம்கள், ஜாதவ் தலித்துகள், மற்றும் யாதவ்கள் மற்றும் கட்சி அவர்களிடமிருந்து அதிக ஆதரவை எதிர்பார்க்கவில்லை. 2024-ம் ஆண்டில் அனைத்து பயனாளிகளிலும் குறைந்தது ஒரு கோடி பேர் பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பார்கள் என்று அக்கட்சி மதிப்பிட்டுள்ளது. பாஸ்மண்டா முஸ்லிம்கள் கட்சியை ஆதரித்தால் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த திட்டங்களிலிருந்து அவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், பா.ஜ.க அவர்களுக்கு சட்டமன்ற சபையிலும் பிரதிநிதித்துவத்தை அளித்துள்ளனர்” என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
பா.ஜ.க ஏற்கனவே அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. மேலும் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் (எஸ்.பி.எஸ்.பி) உடன் மீண்டும் கூட்டணி வைப்பதன் மூலம் யாதவ் அல்லாத பிற பின்தங்கிய வகுப்புகள் (ஓ.பி.சி-க்கள்) மத்தியில் அதன் ஆதரவை ஒருங்கிணைப்பதாக நம்புகிறது.
ஆர்.எல்.டி கட்சியின் வணிகர்கள் பிரிவு மாநிலத் தலைவர் ரோஹித் அகர்வால் கூறுகையில், “பொதுமக்கள் பா.ஜ.க-விடம் ஏமாற்றமடைந்து ஒரு மாற்றைத் தேடுகிறார்கள். பாட்னா கூட்டம் அந்த மாற்றத்தை வளர்ப்பதற்கும், வாக்காளர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும், வாக்குகளைப் பிரிப்பதைத் தடுப்பதற்குமான ஒரு படி. 2024-க்கு முன்னர் நிறைய கூட்டங்கள் நடத்தப்படும். மேலும் வரும் நாட்களில் எதிர்க்கட்சியின் ஒற்றுமை முயற்சியில் அதிகமான கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.