Advertisment

ஒவ்வொரு இந்தியரும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்: கிரிக்கெட் வர்ணனையாளர் சர்ச்சை கருத்து

பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை கர்நாடகாவுக்கும் பரோடாவுக்கும் இடையிலான ரஞ்சி டிராபி போட்டியின்போது, கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர், ‘ஒவ்வொரு இந்தியரும் இந்தி நம் தாய்மொழியாக இருப்பதால் அதை அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியதால் சர்ச்சையானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BCCI commentator controversy statement, பிசிசிஐ வர்ணனையாளர், ரஞ்சி டிராபி, Every Indian must know Hindi, இந்தி சர்ச்சை, ஒவ்வொரு இந்தியரும் இந்தி தெரிந்திருக்க வேண்டும், karnataka vs baroda, ranji trophy, hindi controversy

BCCI commentator controversy statement, பிசிசிஐ வர்ணனையாளர், ரஞ்சி டிராபி, Every Indian must know Hindi, இந்தி சர்ச்சை, ஒவ்வொரு இந்தியரும் இந்தி தெரிந்திருக்க வேண்டும், karnataka vs baroda, ranji trophy, hindi controversy

பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை கர்நாடகாவுக்கும் பரோடாவுக்கும் இடையிலான ரஞ்சி டிராபி போட்டியின்போது, கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர், ‘ஒவ்வொரு இந்தியரும் இந்தியை நம் தாய்மொழியாக இருப்பதால் அதை அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியதால் சர்ச்சையானது.

Advertisment

'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

பெங்களுரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ரஞ்சி டிராபியில் கர்நாடகா - பரோடா அணிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது, பரோடாவின் இரண்டாவது இன்னிங்ஸின் ஏழாவது ஓவரின் போது இரண்டு வர்ணனையாளர்களில் ஒருவர் கூறுகையில், ‘சுனில் கவாஸ்கர் இந்தியில் வர்ணனை செய்கிறார். அவருடைய மதிப்பை அதே மொழியில் தருகிறார் என்பது எனக்கு பிடித்திருந்தது. அவர் டாட் பந்தை ஒரு ‘பிண்டி’ பந்து என்று அழைத்ததும் எனக்கு மிகவும் பிடித்தது. ” என்று கூறினார்.

அதற்கு மற்றொரு வர்ணனையாளர் சுஷில் தோஷி பதிலளிக்கையில், “ஒவ்வொரு இந்தியரும் இந்தியை அறிந்திருக்க வேண்டும். அது நம்முடைய தாய்மொழி. இதை விட பெரிய மொழி எதுவும் இல்லை.” என்று கூறினார்.

“உண்மையில், நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் என்று சொல்லும் கோபத்துடன் அந்த மக்களைப் பார்க்கிறேன், இன்னும் நாங்கள் இந்தியில் பேச வேண்டும்? நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். அதனால், நீங்கள் வெளிப்படையாக அதன் தாய்மொழியைப் பேசுவீர்கள்” என்று அவர் கூறினார்.

அவரது கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரிய சர்ச்சையை ஏறபடுத்தியது. பல ரசிகர்கள் வர்ணனையாளரின் அறிக்கையை கேள்வி எழுப்பினர். இதில் முரண்பாடு என்னவென்றால், போட்டியில் விளையாடும் இரு அணிகளுக்கும் கன்னடம் மற்றும் குஜராத்தி மாநில மொழிகளாக உள்ளன.

ஒரு மொழி என்பது பல தாய்மொழிகளைக் கொண்ட ஒரு குடை ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி, 43 சதவீத இந்தியர்கள் இந்தி மொழியைப் பேசுகிறார்கள் (போஜ்புரி, ராஜஸ்தானி மற்றும் இந்தி போன்ற பல தாய்மொழிகள் உட்பட).

2011 தரவுகளின்படி பரந்த இந்தி மொழி குழுவின் கீழ் 26 சதவீத இந்தியர்கள் மட்டுமே இந்தியை தாய்மொழியாக பேசுகிறார்கள்.

மொழிகள் குறித்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல்கள், இந்தி நாட்டில் அதிகம் பேசப்படும் மொழியாக இருக்கும்போது, ​​ஒவ்வொரு 10 பேரில் கிட்டத்தட்ட ஆறு பேர் அல்லது 56.37 சதவீத குடிமக்கள் இதை தங்கள் முதல் மொழி அல்லது தாய்மொழியாக அடையாளம் காணவில்லை என்பதையும் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வர்ணனையாளரின் பேச்சு சில மாதங்களாக அடங்கிக் கிடந்த இந்தி சர்ச்சையை தூண்டிவிட்டதால் சமூக ஊடகங்களில் அவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றியுள்ளனர். அவற்றில் சில வாசகர்களின் பார்வைக்கு:

Bcci Ranji Trophy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment