Advertisment

கார்ப்ரேட்டுக்கு அல்ல, ஏகபோகத்திற்கே எதிர்ப்பு; ராஜஸ்தானில் அதானி முதலீடு குறித்து ராகுல் காந்தி கருத்து

இராஜஸ்தானில் ரூ. 60,000 கோடிக்கு முதலீடு செய்வதாக உறுதியளித்த அதானி; பா.ஜ.க விமர்சனம்; கார்ப்ரேட்டுக்கு அல்ல, ஏகபோகத்திற்கே எதிர்ப்பு என ராகுல் காந்தி கருத்து

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கார்ப்ரேட்டுக்கு அல்ல, ஏகபோகத்திற்கே எதிர்ப்பு; ராஜஸ்தானில் அதானி முதலீடு குறித்து ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் ரூ.60,000 கோடி முதலீடு செய்வதாக கெளதம் அதானி உறுதியளித்த ஒரு நாள் கழித்து, ராகுல் காந்தி சனிக்கிழமை தனது கட்சி தொழிலதிபருக்கு எந்த முன்னுரிமையையும் வழங்கவில்லை என்றும், கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானது அல்ல, மோனோபாலிக்கு (ஏகபோக உரிமை) எதிரானது என்றும் வலியுறுத்தினார்.

Advertisment

“திரு அதானி ராஜஸ்தானுக்கு ரூ.60,000 கோடி கொடுத்துள்ளார். அத்தகைய வாய்ப்பை எந்த முதலமைச்சரும் மறுக்க முடியாது. உண்மையில், ஒரு முதலமைச்சர் அத்தகைய வாய்ப்பை மறுப்பது சரியாக இருக்காது, ”என்று கர்நாடகாவின் துருவேகெரேயில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி கூறினார்.

இதையும் படியுங்கள்: பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்ட கவுரி லங்கேஷ் குடும்பம்

"தேர்ந்தெடுக்கப்பட்ட சில வணிகங்களுக்கு உதவ அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. இரண்டு, மூன்று அல்லது நான்கு பெரிய வணிகங்கள் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு வணிகத்தையும் ஏகபோகமாக்குவதற்கு அரசியல் ரீதியாக உதவுவதற்கே எனது எதிர்ப்பு,” என்று ராகுல் காந்தி கூறினார். "நான் எந்த வகையிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல, வணிகத்திற்கு எதிரானவன் அல்ல, ஆனால் இந்திய வணிகத்தின் முழுமையான ஏகபோகத்தை நான் எதிர்க்கிறேன், ஏனெனில் அது நாட்டை பலவீனப்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வணிகங்களுக்கு உதவுவதன் மூலம் அனைத்து வணிகங்களின் முழு ஏகபோகத்தை பா.ஜ.க அரசாங்கம் செய்து கொண்டிருப்பதை இன்று நாம் காண்கிறோம், என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை பா.ஜ.க கேலி செய்யும் பின்னணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தியின் இந்த வலியுறுத்தல் வந்துள்ளது. வெள்ளியன்று, அவரது தலைமையிலிருந்து அவரது திட்டங்கள் மற்றும் "பார்வை" வரை அசோக் கெலாட்டை கௌதம் அதானி பாராட்டினார், இராஜஸ்தானில் இரண்டு நாள் முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில், அதானி முதல்வருக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருந்தார். இதற்கிடையில், அசோக் கெலாட் குஜராத்தைப் புகழ்ந்தார் மற்றும் அதானியை "கௌதம் பாய்" என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.

பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி உதவுகிறார் என்று ராகுல் காந்தி அடிக்கடி அதானியை குறிப்பிடும் விதமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

அதானியாக இருந்தாலும் சரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவாக இருந்தாலும் சரி, ராஜஸ்தானுக்கு வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு தேவைப்படுவதால் அனைவரையும் வரவேற்பதாக முதல்வர் அசோக் கெலாட் கூறினார். அதானியை அவர் புகழ்ந்துரைப்பது "துரதிர்ஷ்டவசமானது" என்று கேலி செய்யும் பா.ஜ.க.,வுக்கு பதிலளித்த அசோக் கெலாட், "இதை நான் கண்டிக்கிறேன். இதை ஒரு பிரச்சினையாக மாற்றினால் பா.ஜ.க.,வுக்கு பெரும் இழப்பு ஏற்படும்,” என்றும் கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட்டுடன் இணைந்து ட்விட்டரில், “அதானி ராஜஸ்தானில் சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய விரும்புகிறார். எந்த முதலமைச்சரும் முதலீடு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். RJ அரசாங்கத்தால் அதானிக்கு சிறப்பு விதிகள் அல்லது கொள்கைகள் எதுவும் இல்லை. அசோக் கெலாட், மோடி வகையின் குரோனிசத்திற்கு மிகவும் எதிரானவர்,” என்று பதிவிட்டார்.

ராஜஸ்தான் உச்சிமாநாட்டில், அதானி மாநிலத்தில் அடுத்த ஐந்து-ஏழு ஆண்டுகளில் ரூ. 60,000 கோடிக்கு மேல் முதலீடு செய்வதாக உறுதியளித்தார், இது அதானி குழுமத்தை ராஜஸ்தானின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றாக மாற்றும்.

கூடுதல் தகவல் – பி.டி.ஐ

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajasthan Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment