Advertisment

ஒடிசா அரசு கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் வெளியேற்றம்

ஆதாரங்களின்படி, வெளியேற்றப்பட்ட மாணவர்கள் புதன்கிழமை இரவு விடுதி வளாகத்தில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு குழு டீனிடம் புகார் அளித்தது.

author-image
WebDesk
New Update
Odisha

State-run Parala Maharaja Engineering College in Odisha’s Berhampur. (Photo: pmec.ac.in)

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் உள்ள அரசு நடத்தும் பராலா மகாராஜா பொறியியல் கல்லூரி 7 மாணவர்கள், மாட்டிறைச்சி சமைத்ததாக கூறி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Advertisment

இந்த சம்பவத்தால் பதற்றம் நிலவியதால் கல்லூரி அருகே தனிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

"ஹால் ஆஃப் ரெசிடென்ஸ் விதிகள் மற்றும் நடத்தை விதிகளை" மீறியதற்காக, மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாக, மாணவர் நலத்துறை டீன் வியாழனன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவருக்கு 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரங்களின்படி, வெளியேற்றப்பட்ட மாணவர்கள் புதன்கிழமை இரவு விடுதி வளாகத்தில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு குழு டீனிடம் புகார் அளித்தது.

பலதரப்பட்ட சமூகமாக, அனைத்து மாணவர்களின் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த சம்பவம் (மாட்டிறைச்சி சமைப்பதாக கூறப்படும்) அமைதியின்மை மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது, இது பதட்டமான சூழலுக்கு வழிவகுத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய போர்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,’ என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கல்லூரிக்கு சென்று முதல்வரை சந்தித்து, மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

புகாரின் அடிப்படையில், கல்லூரி அதிகாரிகள் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தினர்.

கல்லூரி வளாகத்திற்குள் தடைசெய்யப்பட்ட சில நடவடிக்கைகளை மாணவர்கள் செய்தார்கள். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர், அதன்பின்னர் விடுதியில் தங்கியிருந்தவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Read in English: Complaints of ‘cooking beef’ get 7 engineering students expelled from state-run Odisha college hostel

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Odisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment