Advertisment

பெங்களூரு டாக்டர் மரணம்... நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொன்ற காதலி... விசாரணையில் அதிர்ச்சி

சென்னையை சேர்ந்த டாக்டர் உக்ரைனில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் சில மாதங்கள் பணியாற்றி வந்துள்ளார்.

author-image
WebDesk
Sep 22, 2022 17:14 IST
பெங்களூரு டாக்டர் மரணம்... நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொன்ற காதலி... விசாரணையில் அதிர்ச்சி

கர்நாடகாவில் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தற்போது அடுக்கடுக்கான பல ததிடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

கொரோனா தொற்று காலத்தில்  ஒரு கட்டிடக் கலைஞர் டேட்டிங் இணையதளத்தின் மூலம் ஒரு டாக்டரை சந்திக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்கின்றனர். இதனைத் தொடர்ந் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அந்த பெண்ணே மருத்துவரை கொலை செய்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த டாக்டர் விகாஸ் ராஜன் உக்ரைனில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் சில மாதங்கள் பணியாற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேலை கிடைத்து பெங்களூருக்கு வந்த விகாஸ் கட்டிடக் கலைஞரான பிரதிபா (27) என்பவருடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், நிச்சயமும் நடந்துள்ளது.

நிச்சயத்திற்கு பிறகு இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், திடீரென பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற டாக்டர் விகாஸ் அடுத்த 3 நாட்களில் மரணமடைந்துள்ளார்.  இதனிடையே டாக்டர் என் விகாஸ் ராஜன் (27) ஆன்லைனில் ஒரு பெண்ணைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு மற்ற ஆண்களை பாலியல் உறவு செய்து வருகிறார்.

மேலும் ஆன்லைனில் அவர் பெண் என்பதை அடையாளப்படுத்துவதற்காக தனது வருங்கால மனைவியின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார் இது குறித்து பிரதிபா விகாஸ் ராஜனிடம் கேட்டபோது அவர் சும்மா ஜாலியாக பதிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதிபா இதைப் பற்றி தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.  அதன்பிறகு அவர்கள் வீகாஸ் ராஜனை தனிமையில் அழைத்துச்சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் கோமா நிலைக்கு சென்று மரணமடைந்துவிடுகிறார்.

இது குறித்து இறந்த விகாஸ் ராஜனின் சகோதரர் விஜய் ராஜன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  பெங்களூரு நகர போலீசார் பிரதிபா மற்றும் அவரது நண்பர்கள் கவுதம் (27), சுஷில் (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான சூர்யா தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் "குற்றம் சாட்டப்பட்டவரின் நோக்கம் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை - அவர்கள் அவரை (விகாஸ் ராஜன்) தாக்க விரும்பினார்களா அல்லது அவரைக் கொல்ல திட்டமிட்டார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவம் நடந்தபோது பிரதிபா அவர்கள் வீட்டில் இல்லை என்றும், வெளியில் நண்பருடன் தொலைபேசியில் பேசியதாகவும் கூறி வழக்கை திசை திருப்ப முயன்றதாக கூறியுள்ள காவல்துறையினர்,  இந்த வழக்கில் தொடர்புடைய போலியான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஐடிக்கள், விகாஸ் பகிர்ந்த புகைப்படங்கள் அனைத்தையும் நாங்கள் நீக்கிவிட்டோம், மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று ஒரு போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறையின் சார்பில் கூறுகையில், விகாஸ் ராஜன் உக்ரைனில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு, நான்கு மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு மாறுவதற்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். “அவர் எம்.டி நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்காக வேலையை விட்டுவிட்டார். சுமார் 60,000 ரூபாய் சம்பளம் பெற்ற பிரதிபா, அவருக்கு தங்குமிடம் அளித்து, பயிற்சிக் கட்டணம் உட்பட அவரது செலவுகளை கவனித்துக்கொண்டார்” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

செப்டம்பர் 8 ஆம் தேதி, ராஜன் மற்றொரு நபருடன் இன்ஸ்டாகிராமில் அரட்டை அடிப்பதை பிரதிபா கண்டுபிடிதுள்ளதாக கூறியுள்ள காவல்துறையினர்,.அந்த இன்ஸ்டாகிராம் ஐபடி ‘ரம்யா’ என்ற பெயரில் விகாஸ ராஜன் ஓபன் செய்து ஆண்களுடன் பேச தொடங்கியுள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் 772 பின்தொடர்பவர்கள் உள்ளனர்” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

போலீஸ் எஃப்ஐஆர் படி, பிரதிபா, சூர்யா மற்றும் கௌதம் ஆகியோர் செப்டம்பர் 10 ஆம் தேதி சுஷிலின் வீட்டிற்குச் சென்று விகாஸ் ராஜனை வரச் சொன்னார்கள். விகாஸ் அங்கு வந்ததும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் “நள்ளிரவு 12 மணியளவில், சண்டையில் முடிந்துள்ளது. இதில் மூவரும் விகாஸை தரை துடைப்பான் மற்றும் தண்ணீர் பாட்டில்களால் தாக்கினர். பலத்த காயம் அடைந்த விகாஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் விகாஸ் தனது நண்பர்களுடன் சின்ன விஷயங்களுக்காக சண்டையிட்டு காயம் அடைந்ததாக அவர்கள் மருத்துவமனைக்கு தவறான தகவலை அளித்தனர். இருப்பினும், விகாஸ் உடலில் காயங்கள் பலமாக இருந்துள்ளதாகவும் இதனால் அவர் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு்ளளது

எஃப்ஐஆர் படி, விகாஸ் காயமடைந்தவுடன்  பிரதிபா விகாஸின் சகோதரர் விஜயை அழைத்து மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறிய பின்னர் பேகூரில் உள்ள உள்ளூர் போலீசில் விஜய் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையின் சார்பில் வெளியான தகவலின்படி, பிரதிபா சென்னையைச் சேர்ந்தவர் மற்றும் விகாஸ் ராஜன் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் - இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டேட்டிங் விண்ணப்பத்தில் இணைந்ததாகவும், பலமுறை பாலியல் ரீதியாக ஒன்றாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு பிப்ரவரியில், தம்பதியினர் தங்கள் உறவைப் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர். "விகாஸ் எம்.டி நுழைவுத் தேர்வை முடித்த பிறகு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்" என்று போலீசார் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment