செயற்கை நுண்ணறிவு தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி பெறவேண்டியது அவசியம் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியதால், இந்திய தொழில்நுட்பத் துறை தனிப்பட்ட முறையில் கவலைகளை எழுப்பி இருப்பது ஆர்.டி.ஐ. தகவலின்படி தெரிய வந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Behind Govt rollback of advisory on seeking nod for AI services: Industry pushback
கடந்த ஆண்டு கூகிளின் ஜெமினி ஏ.ஐ.யிடம், பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ஜெமினி அளித்திருந்த பதில் தவறாக இருந்தது மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய வகையிலும் இருந்தது. இது வைரலாக பரவிய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூகிள் நிறுவனத்தை மத்திய அமைச்சகம் கேட்டிருந்தது.தொடர்ந்து மத்திய அரசிடம் மன்னிப்பு கோரிய கூகுள் நிறுவனம், தங்களது இயங்குதளம் நம்பகத்தன்மையற்றது என்று தெரிவித்தது.
இதனையடுத்து, செயற்கை நுண்ணறிவு தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி பெறவேண்டியது அவசியம் என்றும், செயற்கை நுண்ணறிவு தளங்களுக்கான சோதனைக் களமாக இந்தியாவைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், செயற்கை நுண்ணறிவு தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி பெற வேண்டியது அவசியம் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியதால், இந்திய தொழில்நுட்பத் துறை தனிப்பட்ட முறையில் கவலைகளை எழுப்பி இருப்பதாக ஆர்.டி.ஐ. தகவலின்படி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' மதிப்பாய்வு செய்த கடிதங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதியன்று மத்திய அரசு கட்டாய அனுமதி உள்ளிட்ட விதிமுறைகளை தளர்த்துமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்திற்கு நாஸ்காம் எனப்படும் தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் கடிதம் எழுதியது.
மத்திய அரசின் முடிவுக்கு ஏ.ஐ துறையில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்பு வலுத்த நிலையில், ”இது இந்தியாவின் மோசமான நடவடிக்கை" என்று பெர்ப்ளெக்ஸிட்டி ஏ.ஐ-ன் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறினார். அமெரிக்க நிறுவனமான ஆண்ட்ரீசென் ஹொரோவிட்ஸ், இந்த நடவடிக்கையை "கேலிக்கூத்து" என்றும், "பொதுமக்கள் விரோதம்" என்றும் விமர்சித்தது.
இதனைத் தொடர்ந்து, மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் ஏ.ஐ நிறுவனர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்து, இரண்டே வாரங்களில் கட்டாய அனுமதி என்ற விதிகளைத் தளர்த்தியது. இந்த வழிகாட்டுதல் வெளிநாடுகளில் உள்ள சில ஏ.ஐ. நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், இந்திய தொழில்நுட்பத் துறை தனிப்பட்ட முறையில் கவலைகளை எழுப்பியிருப்பதே நிதர்சனம் என்பது ஆர்.டி.ஐ. தகவலின்படி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.