Advertisment

ஒற்றுமை சிலையின் பிரகாசத்தின் கீழ், பா.ஜ.க.,வுக்கு சில இருண்ட புள்ளிகள்

ஒற்றுமை இந்தியா சிலையை வெற்றிகரமாக நிறுவிய பிறகும், தொகுதியை கைப்பற்ற போராடும் பா.ஜ.க; பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியில் வலுவான வேட்பாளர்களை களமிறக்கியுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி

author-image
WebDesk
New Update
ஒற்றுமை சிலையின் பிரகாசத்தின் கீழ், பா.ஜ.க.,வுக்கு சில இருண்ட புள்ளிகள்

Aditi Raja

Advertisment

குஜராத், நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் 182 மீட்டர் கட்டமைப்பான ஒற்றுமை சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த பிறகு, இது முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதில் எந்த ஒரு குறிப்பிட்ட உற்சாகமும் இல்லாமல், படேல் சிலை பகுதியில் வழக்கமான நாட்களாக கடந்து வருகிறது. 2018 இல் திறப்பு விழாவைத் தொடர்ந்து சிலை அமைந்துள்ள கிராமத்தின் பெயர் ஏக்தாநகர் என மறுபெயரிடப்பட்டது, மேலும் 2020 இல் 35 க்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்களைக் கொண்ட ‘சுற்றுலா சுற்று’ தொடங்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், கெவாடியா பகுதி அடங்கியுள்ள நந்தோட் (பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி) சட்டமன்றத் தொகுதியை பா.ஜ.க.,விடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியது. மோடி அரசாங்கத்தின் இரண்டு செல்லப்பிள்ளை திட்டங்களான ஒற்றுமையின் சிலை மற்றும் சர்தார் சரோவர் அணை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய தொகுதியில் இந்த முறை பா.ஜ.க.,வுக்கு நிறைய ஆபத்து உள்ளது, அவை அதன் தேர்தல் பிரச்சாரத்தின் மையத்திலும் உள்ளன. இந்த சிலை சாது பெட் தீவில் அணையை கண்டும் காணாத வகையில் உள்ளது.

இதையும் படியுங்கள்: வெளியூர்காரர்’ முத்திரை, உட்கட்சி பூசலுக்கு இடையில், வலுவான எதிர்கட்சி வேட்பாளருடன் மோதும் ரிவாபா ஜடேஜா

இருப்பினும், உலகின் மிக உயரமான சிலையை எழுப்பி, மோடி அரசு சாதனை படைத்திருந்தாலும், அப்பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு அவ்வளவு ஈர்ப்பு இல்லை. அவர்கள் திட்டத்தைச் சுற்றி தங்கள் வாழ்க்கையை மறுசீரமைக்க போராடினர், குறிப்பாக சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட் (SSNNL) க்கு தங்கள் நிலத்தை இழந்தவர்கள். நீதிமன்றத்தில் அவர்கள் செய்த மனு நிராகரிக்கப்பட்டது, கட்டுமானத்தின் போது எதிர்ப்பு போராட்டங்கள் நீடித்தன, போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய, பாரதிய பழங்குடியினக் கட்சியின் (BTP) தலைவரான பிரஃபுல் வாசவா, இப்போது நந்தோட்டில் ஆம் ஆத்மி கட்சி (AAP) வேட்பாளராக உள்ளார்.

40 வயதான கண்பத் தாத்வி, தனது கடையை கைவிட வேண்டியிருந்தது, இப்போது சிலை பார்க்கிங் பகுதிக்கு அருகில் ஒரு தேநீர் கடையை நடத்தி வருகிறார், அவர் முன்பு சம்பாதித்ததில் பாதி வருமானமே பெறுவதாக கண்பத் தாத்வி கூறுகிறார். "சிலையால் வெளியாட்கள் பலன் அடைந்தனர்... பழங்குடியின குடும்பங்களுக்கு என்ன கிடைத்தது? எங்கள் குழந்தைகள் வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகளுக்காக இன்னும் காத்திருக்கும் போது எங்கள் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டன, ”என்று கண்பத் தாத்வி கூறுகிறார், அவரது இரண்டு மகன்களும் ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

செப்டம்பரில், டாடா குழுமத்தின் இரண்டு ஹோட்டல் திட்டங்கள் ஏக்தாநகரில் தொடங்கப்பட்டன.

நானா பிபாடியா கிராமத்தில் வசிக்கும் கண்பத் தாத்வி கூறுகிறார்: "எனது மூத்த மகன் ராஜ்பிப்லாவில் கணினிப் படிப்பை முடித்திருக்கிறான், என் இளைய மகன் ஐ.டி.ஐ.,யில் படிக்கிறான்... சில ஆயிரம் பழங்குடியின இளைஞர்கள் சிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர், ஆனால் 70% வெளியாட்கள்."

கெவாடியாவில் வசிக்கும் நட்வர் தாத்வி, ஜூன் 2020 இல், SSNNL தனது வயல்களை கையகப்படுத்துவதைத் தடுக்க, தன்னைத்தானே எரித்துக் கொள்ள முயன்றார். இப்போது அவரது விவசாய நிலம் இருந்த இடத்தில் அமுல் விற்பனை நிலையத்துடன் கூடிய வாகன நிறுத்துமிடம் உள்ளது. "நாங்கள் சொத்துக்களை இழந்ததற்குப் பிறகு நாங்கள் பா.ஜ.க.,வை நம்ப முடியாது... நாங்கள் 40 பேர் கொண்ட குடும்பமாக இருக்கிறோம், இப்போது எங்களுக்கு நிலம் இல்லை, ஒரு குடும்பமாக எங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை," என்று நட்வர் தாத்வி கூறுகிறார்.

"உள்ளாட்சி தேர்தலில் எங்களின் மிகப்பெரிய குரல்களில் ஒன்றாக இருந்தவர்" பா.ஜ.க.,வுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். "கட்சி அவருக்கு டிக்கெட் கொடுத்தது, அவர் இப்போது மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்" என்று நட்வர் தாத்வி கூறுகிறார்.

பிப்ரவரி 2021 மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க டிக்கெட்டில் கெவாடியாவிலிருந்து வெற்றிபெறுவதற்கு முன்பு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடிய அவரது பக்கத்து வீட்டுக்காரரான தினேஷ் தாத்வியைப் பற்றி நட்வர் தாத்வியின் கருத்துக்கள் உள்ளது.

"வெளியாட்கள்" பலன்களை எடுத்துக் கொண்டது பற்றி கோபப்படும், நவகம் சாரதா தாத்வி, எல்லாக் கட்சிகளும் ஒன்றுதான் என்கிறார். மேலும், “எங்கள் எம்.பி ரத்வா சமூகத்தைச் சேர்ந்தவர் (பா.ஜ.க.,வின் கீதா ரத்வா), எங்கள் எம்.எல்.ஏ வாசவா (காங்கிரஸின் பி.டி வாசவா) சமூகத்தைச் சேர்ந்தவர். இம்முறை, ஒவ்வொரு கட்சியும் வாசவாக்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளன, இருப்பினும் தாத்விகள் 75,000-க்கும் அதிகமானவர்கள்... இதை எந்தக் கட்சியும் சிந்திக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அருகிலுள்ள பல கிராமங்கள், சுற்றுலா வளர்ச்சியை உணர்ந்து, தங்கள் வீடுகளை வீட்டுத் தங்கும் இடங்களாக மாற்றியுள்ளன, சிலர் சொந்தமாக, அரசாங்க உதவியின்றி செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கூறுகிறார்: “நாங்கள் நேரடியாக முன்பதிவு செய்யக்கூடிய தனியார் வீட்டு தங்குமிடங்களின் (ஹோம் ஸ்டே) வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கிறோம்… வாய்ப்பை நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது? அரசாங்க ஹோம் ஸ்டேகளின் ஒரு பகுதியாக இருக்க, அளவுருக்கள் உள்ளன மற்றும் விண்ணப்பங்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் அல்லது நிராகரிக்கப்படலாம். உண்மையில், மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் பலர் கலக்கமடைந்துள்ளனர்” என்றார்.

திட்டத்தின் பக்கத்தில் ஒரு கிராமவாசி இருக்கிறார், அவருடைய இசைக்குழு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நர்மதா ஆரத்தியை சிலைக்கு அருகில் செய்கிறது. "ஒருவருக்கு பல புகார்கள் இருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால், இந்த இடத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒரு சுற்றுலா தலமாக மாற்ற அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. நர்மதா காட் இப்படி மாறும் என்று யார் நினைத்திருப்பார்கள்! ஆர்த்தி ஒரு டஜன் பழங்குடியினர் மற்றும் உற்சாகமான குழந்தைகளுக்கு வேலைகளை உருவாக்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.

4,000 உள்ளூர்வாசிகள், பெரும்பாலும் பழங்குடியினர், பாதுகாப்பு காவலர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட சிலை தொடர்பான பல்வேறு பணிகளில் பணியமர்த்தப்பட்டாலும், வேலையை எதிர்ப்பார்க்கும் ஆர்வலர்களின் எண்ணிக்கை நீண்டதாக உள்ளது.

லிம்டி கிராமத்தைச் சேர்ந்த ரமிலா தாத்வி கூறும்போது, ​​“எனது மகன் முதல் இரண்டு ஆண்டுகள் காவலாளியாகப் பணிபுரிந்தான், ஆனால் தொற்றுநோய்களின் போது அவுட்சோர்சிங் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அவர் இன்னும் திரும்ப அழைக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறார்... குறிப்பாக திறமையான வேலைகளுக்கு, வெளியாட்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்." என்று கூறினார்.

நவம்பர் 1 ஆம் தேதி ஜம்புகோடாவில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பிராந்திய வேலைகளைப் பெறுவதற்கான தனது அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்று ஒற்றுமை சிலை என்று குறிப்பிட்டார். பழங்குடியினரிடையே தான் வாழ்ந்ததால் அவர்களின் நாடித் துடிப்பை அறிந்துள்ளதாகக் கூறிய மோடி, “குஜராத்தில் உள்ள பழங்குடியினப் பகுதிகள் சுற்றுலாவுக்கான இடங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவை... சபுதாரா மற்றும் ஒற்றுமை சிலையை உருவாக்குவதன் மூலம் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தியுள்ளோம்” என்றார்.

நர்மதா மாவட்டத்தில் உள்ள மற்ற சட்டமன்றத் தொகுதியான தெடியாபாடாவை சிலையின் பலம் மற்றும் அதன் பிற முயற்சிகளின் மூலம் மீண்டும் வெற்றி பெற முடியும் என்று பா.ஜ.க நம்புகிறது. 2017ல், காங்கிரசின் கூட்டணிக் கட்சியான பாரதிய பழங்குடியினர் கட்சி தெடியாபாடா தொகுதியில் வெற்றி பெற்றது.

ஆனால் இரண்டு இடங்களிலிருந்தும் செல்வாக்கு மிக்க முன்னாள் பாரதிய பழங்குடியினர் கட்சி தலைவர்கள் ஆம் ஆத்மி சார்பாக களமிறங்கியுள்ளனர். அதன் நந்தோட் வேட்பாளர் பிரஃபுலா வாசவா நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார், ஆனால் மோடி அரசாங்கத்தின் திட்டத்தை முடிக்கும் முனைப்பு காரணமாக போராட்டம் வலுவிழந்துள்ளது, ஆம் ஆத்மி கட்சியின் தெடியாபாடா வேட்பாளர் சாய்தர் வசாவா வலுவான நிலையில் உள்ளார்.

ஆம் ஆத்மி தவிர, பா.ஜ.க.,வும் நந்தோட்டில் ஒரு கிளர்ச்சியை எதிர்கொள்கிறது. மகப்பேறு மருத்துவ நிபுணரும், பாரதிய ஜனதா கட்சியின் 4 முறை எம்.பி.யாக இருந்த பரூச் சந்து தேஷ்முக்கின் மகளுமான தர்ஷனா தேஷ்முக்கை கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பா.ஜ.க.,வின் பழங்குடி மோர்ச்சா தலைவரும், 2012ல் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு நந்தோட் உருவாவதற்கு வழிவகுத்த ராஜ்பிப்லாவில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.வுமான ஹர்ஷத் வாசவா சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை, ஹர்ஷத்தை கட்சி இடைநீக்கம் செய்தது.

பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறுகையில், ஹர்ஷத் பாதிப்பை ஏற்படுத்துவார் என்றாலும், சுயேட்சையாக அவர் பெரிய ஆபத்து இல்லை. “வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பழங்குடியினர் கற்பனை செய்து பார்க்க முடியாமல், கட்சிகளின் உணர்ச்சிகரமான சூழ்ச்சிக்கு ஆளான காலம் போய்விட்டது. இப்போது பா.ஜ.க.,வின் கொள்கைகளுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்,” என்று கூறினார்.

கடந்த முறை நந்தோட்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ், ஹரேஷ் வசாவாவுக்கு வாய்ப்பளித்து, மூத்த தலைவரும் சிட்டிங் எம்.எல்.ஏ.,வுமான பி.டி வாசவாவை கைவிட்டது. காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறும்போது, ​​“ஹரேஷுக்கு வலுவான முன்னிலை உள்ளது. ஆம் ஆத்மியின் பிரபுல் வாசவாவால் பாதிப்பு ஏற்படலாம், ஆனால் பழங்குடியினர் காங்கிரஸின் வலுவான ஆதரவாளர்கள். பா.ஜ.க, ரொட்டி வாங்க முடியாத மக்களுக்கு கேக் விற்க முயற்சிக்கிறது… ஆனால் பழங்குடியினரின் மனநிலை தெளிவாக உள்ளது. தங்கள் சொத்துக்களை குறிவைக்கும் எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள். இந்த திட்டம் இன்னும் முடிவடையவில்லை,” என்று கூறினார். நிலம் கையகப்படுத்தும் போராட்டங்களில் காங்கிரஸ் தீவிரமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முரண்பாடாக, பழங்குடியினரின் உண்மையான ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் அதே வேளையில், சர்தார் சரோவர் அணைக்கு அனைத்துக் கட்சிகளும் உரிமை கோருகின்றன. 1961-ல் பிரதமர் ஜவர்ஹர்லால் நேரு அணைக்கு அடிக்கல் நாட்டினார் என்று காங்கிரஸ் பேசுகிறது. மோடியின் அர்ப்பணிப்பால்தான் இந்த அணையும், சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்கு பார்வையும் நிறைவேறியது என்று பா.ஜ.க வலியுறுத்துகிறது, மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் அணைக்கு எதிரான போராட்டக்காரர் மேதா பட்கர் கலந்துக் கொண்டது பா.ஜ.க.,வுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. ஒருமுறை மேதா பட்கருக்கு தேர்தல் டிக்கெட் கொடுத்ததற்காக ஆம் ஆத்மி கட்சியையும் பா.ஜ.க தாக்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அரசாங்கம் கட்ச் "மாவட்டத்தின் ஒவ்வொரு மூலைக்கும் நர்மதா தண்ணீரைப் பெற்றுத் தரும்" என்று உறுதியளித்து இதைத் தீர்க்க முயற்சிக்கிறார்.

தற்செயலாக, நர்மதா அணையின் முழு பிரதான கால்வாய் வலையமைப்பும் முடிந்த பிறகு, ஜூலை மாதம் கட்ச் கிளை கால்வாய் திறக்கப்பட்ட பிறகு குஜராத்தில் நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

நர்மதாவில் உள்ள ராஜ்பிப்லாவைச் சேர்ந்தவரும், நர்மதாவில் கட்சியின் பிரச்சாரத்தை மேற்பார்வையிடுவருமான பா.ஜ.க பருச் எம்.பி மன்சுக் வசாவா, இது 2017 அல்ல, 2021 கிராமப்புறத் தேர்தல்களில் இருந்து கட்சி கவனம் செலுத்தி வருகிறது என்று கூறுகிறார். "நர்மதா மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் கெவாடியா தொகுதியை வென்றது மற்றும் நர்மதா மாவட்டத்தின் கட்டுப்பாடு ஆகியவை கள பிரச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன... பழங்குடியினர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் மெதுவாக தீர்க்கப்படுகின்றன," என்று எம்.பி மன்சுக் வசாவா கூறுகிறார்.

நந்தோட் தொகுதி அடங்கியுள்ள நர்மதா மாவட்டத்தின் தலைநகரான ராஜ்பிப்லா, மாநிலத்தில் உள்ள இரண்டு பழங்குடிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகத்தின் தாயகமாகவும் உள்ளது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, மாநில அரசு ராஜ்பிப்லாவில் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் அளித்தது.

தெடியாபாடாவில் வசிக்கும் ஜிகர் தாத்விக்கு, இந்தப் பிரச்னைகள்தான் முக்கியமானவை. “இன்றும் பல கிராமங்களில் சுகாதார நிலையங்கள் காணவில்லை. சுற்றுலாத் திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டத்தையோ, மக்களுக்கு ஆக்ஸிஜனின் தரத்தையோ அதிகரிக்க முடிந்ததா? ஆட்சிக்கு வந்ததும், கட்சிகள் பழங்குடியினரை மறந்து நம் உரிமைகளை மிதிக்கின்றன,” என்கிறார் ஜிகர் தாத்வி.

இரண்டு இடங்களிலும் பிரச்சாரம் செய்வதற்கு அதன் உள்ளூர் தலைவர்களை நம்பியிருக்கும் காங்கிரஸ், பழங்குடியினரை ஈர்ப்பதற்காக இந்த ஆண்டு மே மாதம் தஹோடில் ராகுல் காந்தியால் மிகுந்த உற்சாகத்திற்கு மத்தியில் தொடங்கப்பட்ட நவ்சர்ஜன் ஆதிவாசி அதிகார யாத்திரையின் எந்த அறிகுறியும் இல்லாமல், அரை மனதுடன் போராடுவதை காங்கிரஸ் மறுக்கிறது. மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ​​“இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அடிமட்ட தொண்டர்கள்” என்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gujarat Bjp Congress India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment