Advertisment

அமெரிக்காவில் பெங்கால் நடனக் கலைஞர் கொலை : உடலை இந்தியா கொண்டுவர உறவினர்கள் அரசிடம் கோரிக்கை

அமெரிக்காவின் டெல்மார் பவுல்வர்டு மற்றும் கிளாரெண்டன் அவென்யூவில் கடந்த பிப்ரவரி 27-ந் தேதி இரவு 7:15 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Dancer Amarnath

அமர்நாத் கோஷ், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை படித்து வந்தாா.

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த பாரம்பரிய நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் (34) உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் அரசின் உதவியை நாடியுள்ளனர்.

Advertisment

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரி பகுதியைச் சேர்ந்த அமர்நாத் கோஷ், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை படித்து வந்த இவர், கடந்த பிப்ரவரி 27-ந் தேதி மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடை பயணம் மேற்கொண்டபோது, மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கடந்த மார்ச் 1-ந் தேதி மும்பையை சேர்ந்த நடிகர் தேவோலீனா பட்டார்சார்ஜி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டபோது தான் அனைவருக்கும் தெரிந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க : Bengal dancer shot dead in US, kin desperately seek govt help to bring body

இதனையடுத்து அமர்நாத் கோஷ் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரதமர் அலுலவகம், அமரெிக்க தூதரகம் ஆகிய சமூகவலைதளங்களுக்கு பல்வேறுதரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனிடையே அமர்நாத் கோஷ் உடலை இந்தியா கொண்டுவந்து எப்படி தகனம் செய்வது என்பது பற்றி தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும், அவரது உடலை கொண்டு வருவதற்காக பணம் வசூலிக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமர்நாத் கோஷின் மாமா கூறுகையில்,  உடலைக் கொண்டுவர 10 முதல் 12 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று என்னிடம் கூறப்பட்டது. எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. அதே சமயம் அங்கு உடலை எப்படி தகனம் செய்வது என்று தெரியவில்லை. நான் முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை. டெல்லியில் இருந்து எனது உறவினர் ஒருவர் என்னை அழைத்து இது பற்றி (அமர்நாத் கொலை) தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள அமர்நாத்தின் நண்பர் மூலம் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் எங்களுக்கு முறையான தகவல் வரவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம்,” என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

அமர்நாத் சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்தார். அவரது பெற்றோரின் ஒது பிள்ளை என்பதால் மாமா ஷியாமலும் அவரது குடும்பத்தினரும் அவருக்கு நெருங்கிய உறவினர்கள். இது குறித்து அமர்நாத் அப்பாவின் சகோதரி ஷியாமல் கூறுகையில், எனது மூத்த சகோதரர் (அமர்நாத்தின் தந்தை) அசிம் கோஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் உள்ளூர் டிஎம் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

அவருடைய மனைவி, என் மூத்த மைத்துனி சீகா கோஷ் அதற்கு முன்பே இறந்துவிட்டார். என் அண்ணனுக்கு அமர்நாத் ஒரே பிள்ளை. அமர்நாத்தின் சடலத்தை மீட்டு வர அரசின் உதவியை கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த கடிதம் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என இங்குள்ள அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அவர்கள் டெல்லியை தொடர்பு கொண்டு உடலை மீட்க உதவுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் (பிர்பூம்) ராஜ் நாராயண் முகர்ஜி, அமர்நாத்தின் மரணம் குறித்து எங்களுக்கு எங்கிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. அமெரிக்காவில் இருந்து தெரிந்தவர்கள் சிலரால் மரணம் குறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் எழுத்துப்பூர்வமாக எதுவும் தகவல் இல்லை. நாங்கள் அதிகாரப்பூர்வமாக தகவல்களை பெறும் வரை, எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, ”என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிரபல தொலைக்காட்சி நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், அமர்நாத்தின் உடலைக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் உதவி கோரியுள்ளார். "அமெரிக்காவில் உள்ள சில நண்பர்கள் உடலைக் கோர முயற்சிக்கிறார்கள், ஆனால் இன்னும் அதைப் பற்றி எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை" என்று தேவோலீனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அமர்நாத்தின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அமர்நாத் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு குடிபெயர்ந்தார். அவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, மணிப்பூரி மற்றும் கதக் நடனங்களில் பயிற்சி பெற்றவர். அவர் ரவீந்திர நிருத்யா போன்ற வேறு சில பாணிகளையும் அறிந்திருந்தார், மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார், புகழ்பெற்ற சென்னை நிறுவனமான கலாக்ஷேத்ராவின் முன்னாள் மாணவரான அமர்நாத், கலாச்சார அமைச்சகத்திடமிருந்து குச்சிப்புடிக்கான தேசிய உதவித்தொகையைப் பெற்றவர் மற்றும் புது தில்லியில் நடந்த சர்வதேச நடனம் மற்றும் இசை விழாவில் நிருத்ய கனக் மணி சமன் விருதைப் பெற்றார்.

இது குறித்து அவரது பேஸ்புக் சுயவிவரத்தில் பல நடன வீடியோக்கள் உள்ளன. "அவர் சமையல் மற்றும் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்," என்று நண்பர் கூறியுள்ளார். அவரது கொலையைத் தொடர்ந்து, சிகாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், இது குறித்து விசாரிக்க உள்ளூர் காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டதாகக் கூறியது. "நாங்கள் தடயவியல், காவல்துறையுடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

கோஷ் மாணவராக இருந்த வாஷிங்டன் பல்கலைக்கழகம், அவரது கொலையை "புரிந்துகொள்ள முடியாத அறிவற்ற வன்முறை" என்று கண்டித்துள்ளது. அமர்நாத்தின் குடும்பத்தினரும் நண்பர்களும் அனுபவிக்கும் வலியையும் வேதனையையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது மரணம் நம் அனைவருக்கும் ஒரு பேதிர்ச்சி. இந்த வகையான அர்த்தமற்ற வன்முறை புரிந்துகொள்ள முடியாதது. மேலும் இந்த இழப்பால் நாங்கள் பேரழிவிற்கு ஆளாகிறோம். எங்கள் சொந்த செயின்ட் லூயிஸ் சமூகத்தில் இது நடப்பது மனவேதனைக்குரியது" என்று மாணவர் விவகாரங்களுக்கான துணை வேந்தர் அண்ணா "டாக்டர் ஜி" கோன்சலஸ் அனைத்து வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செயின்ட் லூயிஸ் பெருநகர காவல் துறையின் கூற்றுப்படி, டெல்மார் பவுல்வர்டு மற்றும் கிளாரெண்டன் அவென்யூவில் செவ்வாய்க்கிழமை இரவு 7:15 மணிக்கு (உள்ளூர் நேரம்) துப்பாக்கிச் சூடு நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

indian Kolkata
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment