மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமையை பேச வைத்த திருமணம்… உலகெங்கும் இருந்து குவியும் பாராட்டு

Shreya Das Bengal first rainbow wedding : 2016ம் ஆண்டு நடைபெற்றா Transgender Visibility Day – அன்று, முதல்முறையாக திஸ்தாவை மணப்பெண் அலங்காரத்ஹ்டில் கண்டு மயங்கினேன் என்று நினைவலைகளில் நீந்துகிறார் சக்கரவர்த்தி. அவளிடம் நான் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன். ஆனாலும் காதலை அவ்வளவு எளிமையாக தெரியப்படுத்த…

By: Updated: August 15, 2019, 03:18:16 PM

Shreya Das

Bengal first rainbow wedding : 2016ம் ஆண்டு நடைபெற்றா Transgender Visibility Day – அன்று, முதல்முறையாக திஸ்தாவை மணப்பெண் அலங்காரத்ஹ்டில் கண்டு மயங்கினேன் என்று நினைவலைகளில் நீந்துகிறார் சக்கரவர்த்தி. அவளிடம் நான் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன். ஆனாலும் காதலை அவ்வளவு எளிமையாக தெரியப்படுத்த இயலவில்லை. இதனால் என்னுடைய நட்பு முறிந்துவிடும் என்ற பயம் எனக்கு.

ஆனாலும் என் நண்பர்களிடம் பேசி ஒரு முடிவினை எடுத்துவிட்டு, தைரியமாக அவளிடம் என்னுடைய எண்ணங்களைக் கூறினேன். நான் அவளிடம் “ஐ லவ் யூ” என்றெல்லாம் கூறவில்லை. ஆனால் நான் அவளுடன் என்றும் இருப்பேன் என்று உறுதி அளித்தேன் என்று கூறுகிறார் மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி. அவருடைய மனைவி திஸ்தா தாஸ் மீது  வைத்த கண்களை வாங்காமல், அதே காதல் உள்ளத்துடன் நம்மிடம் இந்த வார்த்தைகளை தெரிவித்தார்.

பின்பு இருவரும்  sex re-assignment  அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இந்த மாதத்தின் துவக்கத்தில் இருவருக்கும் வங்க முறைப்படி திருமணம் முடிந்து, உலக அளவில் தலைப்புச் செய்திகளாக மாறிவிட்டனர். அவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் அதே நேரத்தில் எதிர்மறை விமர்சனங்களும் வந்த வண்ணமே உள்ளன.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க : 

உலகம் ஆயிரம் கூறினாலும், சிறு கவலையுமின்றி, கொல்கத்தாவின் புறநகர் பகுதியான அகர்பாராவில் நான்கு நாய்கள் மற்றும் 8 பூனைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் இந்த தம்பதியினர்.  தீபன் இது குறித்து முதல் முறையாக பேசிய போதே நான் அவனை எச்சரிக்கை செய்தேன். இந்த சமூகம் ஒரு ஆண், ஒரு திருநங்கையை திருமணம் செய்துகொண்டால், அந்த ஆண் அந்த திருநங்கையை காப்பாற்றுவான் என்று நம்புகிறது. ஆனால் ஒரு திருநம்பி ஒரு திருநங்கையை காப்பாற்றுவார் என்பதை இவ்வுலகம் ஏற்க மறுக்கிறது.

என்னுடைய வாழ்வு முழுவதும் போராட்டங்களால் நிறைந்தது. என்னைப் போன்றே இருக்கும் திருநங்கைகள் கூட, இந்த விவகாரத்தில் எங்களை வரவேற்கவில்லை என்பது தான் வருத்தமானது என்று கூறுகிறார் 38 வயது மிக்க தீஸ்தா. ஆனாலும் இவர்களின் இந்த முடிவு, மாற்றுப்பாலினத்தவர்களுக்கான உரிமைகள் குறித்து யோசனை செய்யவும், அதனை நிலை நிறுத்தவும் பெரிய அளவில் உதவும். இந்தியாவில் மாற்றுப்பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டத்தில் இடம் இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மேற்கு வங்க திருநங்கைகள் வாரியத்தின் உறுப்பினரான ரஞ்சிதா சிங் இந்த புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். மேலும் இந்த திருமணம் குறித்து அவர் குறிப்பிடுகையில் “இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. திருமணம் என்பது தான் வாழ்வின் முக்கிய இலக்கா? இந்த சமூகம் எங்களை முழுவதும் இந்த சமூகத்திற்கு சற்றும் தொடர்பற்றவர்களாக பார்க்கின்றது. எங்களை மனிதர்களாகவும் கூட நடத்துவதில்லை. எனக்கு திஸ்தா வெகுநாட்களுக்கு முன்பு இருந்தே நல்ல தோழி. அவர்கள் இருவரையும் நான் வாழ்த்துகின்றேன். ஆனாலும் இந்த சமூகம், இந்த பழக்க வழக்கங்கள் எங்களை நாங்கள் எப்படியோ அப்படியாக வாழ வைப்பதில்லை. ஆனால் நாங்களோ மறுபடியும் இந்த ஆண் ஆதிக்க சமூகத்தின் ஒரு அங்கமாக செயல்பட விரும்புகின்றோம். இது ஒரு வகையில் தோல்வி தான் என்று கூறுகிறார்.

மேலும் படிக்க : 2 பெண்கள் சேர்ந்து நடனமாடக் கூடாதா? பௌன்சர்கள் வைத்து வெளியேற்றிய பிரபல ஹோட்டல்!

அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனாலும் அவர்கள் திருநம்பி திருநங்கையாக மணந்து கொள்ளவில்லை. ஒரு ஆண் பெண் என்று மணந்து கொண்டனர். வங்க முறைப்படி இவர்கள் திருமணம் செய்து கொண்டதோடு, தங்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவும் செய்துள்ளனர்.

சின்ஹாவின் இந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது தீஸ்தா “மாற்றுப்பாலினத்தவர்கள் திருமணம் குறித்து சட்டம் ஏதும் இல்லை. ஆனாலும் ஒரு மனிதன் தன்னை எப்படியாக உணர வேண்டும் என்பது அவரவர் விருப்பம் இல்லையா? எங்களின் இயக்கங்கள் இதற்கும் சேர்த்து குரல் தரவில்லையா? நான் ஒரு பெண்ணாக உணர்கின்றேனா அல்லது திருநங்கையாக உணர்கின்றேனா என்பது என்னுடைய விருப்பம். நான் ஒரு பெண்ணாகவே உணருகின்றேன். என்னுடைய வாக்காளர் அடையாள அட்டையும் அதையே உறுதி செய்கிறது. நான் எங்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காவும் போராடினேன். எனக்கு கிடைத்த சுதந்திரத்தை நான் பயன்படுத்தும் போது என்னுடைய நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன” என்று வருத்தம் தெரிவிக்கின்றார்.

தீஸ்தாவின் தாயார்

சுஷாந்தோ தாஸாக பிறந்த திஸ்தா 2004ம் ஆண்டு தன்னுடைய பாலின உணர்வுகளை அறிந்து அதற்கு மதிப்பளித்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவருடைய அனைத்து கால கட்டத்திலும் அவருடன் துணை வந்தது தீஸ்தாவின் தாயார் சுப்ரா. இப்படியான ஒரு மகளை வளர்ப்பதற்கான என் அம்மா அவமானங்களை சந்தித்தார். ஆனாலும் அவர் ஒரு போதும் என்னை விட்டு விலகி நிற்கவில்லை. அனைத்து காலத்திலும் அவர் உற்ற துணையாக என்னுடன் இருந்தார்.

I Couldn’t Be Your Son, Mom என்ற ஆவணப்படுத்திலும், Third Gender என்ற குறும்படத்திலும் தீஸ்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் எங்கள் மக்களுக்காக எங்களின் போராட்டங்கள் தொடரும் என்று புதுமண தம்பதிகள் கூறியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Bengal first rainbow wedding murmurs of unhappiness strong assertions of choice

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X