மேற்கு வங்கத்தில் ஜூலை 8ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பாக பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ஆளுனர் சி.வி. ஆனந்த போஸ், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களிடம் உரையாடினர்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போஸ் சென்றாார். அங்கு உதவி எண்கள் அறை திறக்கப்பட்டுள்ளுது.
மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் அரசும் மாநில தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ள நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் தங்கள் குறைகளை பதிவு செய்ய ஒரு தளத்தை வழங்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் உதவி அறையை அமைதி அறை என்று வர்ணித்து ராஜ்பவன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், வன்முறை பாதித்த பகுதிகளுக்கு ஆளுநர் அடிக்கடி வருகை தந்து, தேர்தலுக்கு முந்தைய வங்காளத்தில் கிரிமினல் மிரட்டல் குறித்து குடிமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
ஜூன் 9 ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்து வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் பாரிய வன்முறைகள் நடந்துள்ளன, எதிர்க்கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் இந்த வன்முறையை விழ்த்துவிட்டதாக குற்றம் சாட்டின. இந்த வன்முறையில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.
தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் முதலில் மாநில நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, வன்முறையினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதால், போஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட முடிவு செய்தார்.
வெள்ளியன்று, போஸ் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கருக்கு சென்றார். போஸ் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தது மட்டுமல்லாமல், அங்குள்ள மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தினார்.
சனிக்கிழமையன்று, போஸ் அதே மாவட்டத்தின் கேனிங் பகுதிக்குச் சென்று, மாநிலத்தின் சில பகுதிகளில் "ஜனநாயகத்தின் சீரழிவு" குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
போஸ் மேலும், “ஆளுநர் என்ற முறையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமல்ல, அரசியலமைப்பை உருவாக்கியவர்களிடமும் எனக்கு அர்ப்பணிப்பு உள்ளது.
ஒரு ஆளுநர் அரசியலமைப்பின் பாதுகாவலராக இருக்க வேண்டும். சாதாரண மனிதனின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
இவற்றில் ஏதேனும் ஒரு அத்துமீறல் ஏற்பட்டால், நான் நிச்சயமாக அதை முழு வலிமையுடன் பாதுகாப்பேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பின்னால் நிற்பேன்” என்றார்.
போஸ் இப்போது முர்ஷிதாபாத் மாவட்டத்திற்குச் சென்று அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்க உள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
சனிக்கிழமையன்று, போஸ் மீண்டும் ராஜிவா சின்ஹாவை அழைத்தார், ஆனால் அவர் வேட்பு மனுக்களை பரிசீலிப்பதில் பிஸியாக இருப்பதாகக் கூறி அதைத் தவிர்த்துவிட்டார்.
ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில நிர்வாகத்தின் பணிகளில் ஆளுநர் தலையிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
டிஎம்சி மூத்த தலைவரும் எம்பியுமான சவுகதா ராய் கூறுகையில், “தேர்தல் வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கீழ் உள்ளது. இது ஆளுநரின் வேலை அல்ல (சட்டம் ஒழுங்கை கவனிப்பது). தேர்தல் வன்முறையை கண்காணிப்பது மாநில தேர்தல் ஆணையரின் வேலை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஆளுநருக்கு எந்தப் பங்கும் இல்லை” என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் குணால் கோஷ் கூறுகையில், “கவர்னர் அரசியல் முகவரா? எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் லாபத்திற்காக மாநிலத்தில் கலவரத்தை உருவாக்கி வருகின்றன. ஆனால், கவர்னர் பா.ஜ.க.வினராக நடித்து, இடதுசாரி முன்னணி, காங்கிரஸ், பா.ஜ.க.வின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எண்ணெய் ஊற்றி வருகிறார். எங்கள் கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்ட அல்லது தாக்கப்பட்ட இடங்களையும் அவர் பார்வையிட வேண்டும்” என்றார்.
எனினும் ஆளுனரின் இந்த நடவடிக்கைகளை பாஜக மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.