Advertisment

அன்று முதல் சரியாக சாப்பிடவோ தூங்கவோ இல்லை: சென்னை வெள்ளத்தில் மாயமான வங்காள தொழிலாளி

கடந்த வாரம் ஆந்திராவில் கரையைக் கடந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சென்னையும் ஒன்று. இதன் காரணமாக சென்னை மற்றும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

author-image
WebDesk
New Update
Bengal man missing

தீபக் பாக்டி (இடது) மற்றும் அவரது பெற்றோர் ஸ்ரீதர் பாக்டி மற்றும் பார்தி பாக்டி.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த, சென்னையில் பணிபுரியும் 21 வயது புலம்பெயர்ந்த தொழிலாளி, கடந்த 6 நாட்களாக காணவில்லை, என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

Advertisment

பங்குரா மாவட்டத்தில் உள்ள சோனாமுகி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிரோமணிபூர் கிராமத்தில் வசிப்பவர், தீபக் பாக்டி. மொத்த குடும்பமும் அவரது ஒரே வருமானத்தில் தான் ஓடுகிறது. அவருடைய மூத்த சகோதரிக்கு திருமணமாகிவிட்டது.

அவரது பெற்றோர் ஸ்ரீதர் பாக்டி (55) மற்றும் பார்தி பாக்டி (48) தங்கள் மகனை காணவில்லை போலீசில் புகார் அளித்துள்ளனர். கடைசியாக டிசம்பர் 4ம் தேதி அவருடன் பேசி உள்ளனர், அன்றிலிருந்து அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

நானும் என் மனைவியும் தூக்கத்தை இழந்து விட்டோம், சரியாக சாப்பிடவில்லை. புயல் சென்னையைத் தாக்கியதிலிருந்து நாங்கள் எங்கள் மகனுடன் போனில் பேசவில்லை, என்று ஸ்ரீதர் கூறினார், தீபக் தென் சென்னையில் வேளச்சேரி பகுதியில் வசித்து வந்தார்.

கடந்த வாரம் ஆந்திராவில் கரையைக் கடந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சென்னையும் ஒன்று. இதன் காரணமாக சென்னை மற்றும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் புயலுக்கு பிறகு குறைந்தது 17 பேர் பலியாகினர்.

தீபக்கின் பெற்றோர் கூறுகையில், ‘வங்காள அரசாங்கத்தின் பதிவுகளில் எங்கள் மகன் புலம்பெயர்ந்த தொழிலாளியாக பதிவு செய்யப்படவில்லை.

கடந்த இரண்டு மூன்று வருடங்களில் நான்காவது தடவையாக அவன் புலம்பெயர்ந்த தொழிலாளியாக வேலை செய்ய சென்றான். நவம்பரில் சென்னைக்கு கிளம்பினான்

ஒரு ஏஜெண்ட் தான் என்மகனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்தார், அவன் சென்னையில் கட்டுமான தளத்தில் வேலை செய்து வந்தான். அருகில் உள்ள தோலாய் கிராமத்தில் வசிக்கும் ஷியாமல் கோஷ், என் மகனை சென்னைக்கு அழைத்துச் சென்றார், என்றார் ஸ்ரீதர்.

டிசம்பர் 4 ஆம் தேதி (திங்கட்கிழமை) ஷியாமலின் அழைப்பிற்குப் பிறகு தம்பதியினர் தங்கள் மகன் காணாமல் போனதை அறிந்தனர்.

கடந்த திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஷியாமல் அழைத்துள்ளார். என் மனைவி அழைப்பை எடுத்தார், அவர் தொலைபேசியை என்னிடம் கொடுக்க சொன்னார். என் மகனைக் காணவில்லை என்று சொன்னார். நான் அதிர்ச்சியடைந்தேன்.

அப்போதிருந்து, நான் ஷியாமலுக்கு எப்போது போன் செய்தாலும், அவர் பார்க்கிறேன் என்று கூறுகிறார். சோனாமுகி காவல் நிலையம் சென்று, என் மகனை காணவில்லை, என்றேன். சென்னை காவல்துறையின் காணாமல் போனவரின் டைரி தேவைப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இறுதியாக, அவர்கள் இன்று அதை எடுத்துக் கொண்டனர், என்று ஸ்ரீதர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

தீபக் காணாமல் போனது குறித்து சென்னையில் உள்ள தீபக்கின் சைட் சூப்பர்வைசர் தான் தன்னிடம் கூறியதாக ஷியாமல் கூறினார்.

திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, சைட் சூப்பர்வைசர் என்னை அழைத்து தீபக்கை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறினார். தீபக் ஞாயிற்றுக்கிழமை இரவு சைட்டில் இருந்து வீடு திரும்பியபோது காணாமல் போயிருக்கலாம். அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.

அப்போதுதான் தீபக் தனது சக ஊழியர் ராகுல் பாக்டியுடன் தொடர்பை இழந்தார். அதன்பிறகு அவரை கண்டுபிடிக்க முடியவில்லை, என்றார் ஷியாமல்.

ஸ்ரீதரும், பார்தியும் தங்கள் மகனைப் பற்றிய கூடுதல் தகவலுக்காக காத்திருக்கையில், அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளனர்.

இதுகுறித்து சோனாமுகி பாஜக எம்எல்ஏ திவாகர் கராமி கூறுகையில், ’சென்னையில் தீபக் பாக்டி காணாமல் போன செய்தி சற்று தாமதமாகவே எனக்கு கிடைத்தது. இன்று, நான் சிரோமணிபூர் கிராமத்திற்குச் சென்று தீபக்கின் குடும்பத்தினரைச் சந்திப்பேன். குடும்பத்தினர் காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கேள்விப்பட்டேன்’, என்றார்.

இதுகுறித்து சோனாமுகியின் தொகுதி மேம்பாட்டு அதிகாரி பிரியங்கா ஹதி கூறுகையில், ’இந்த விஷயம் எங்களுக்குத் தெரிய வந்தது. தீபக் பாக்டி இன்னும் காணவில்லை. காணாமல் போன போது அவருடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’, என்று கூறினார்.

இதற்கிடையில், தீபக்கின் அக்கம்பக்கத்தினர் அவரை கண்டுபிடிக்க உயர் அதிகாரிகள் தலையிட வேண்டும் என்று கோருகின்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய தீபக்கின் அண்டை வீட்டாரான அபிஜித் பானர்ஜி, ’அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. இறுதியாக, காணாமல் போன டைரி பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபக் டிசம்பர் 5 முதல் காணவில்லை என்று பிடிஓ அலுவலகம் மற்றும் பிறரிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.

Read in English: ‘Haven’t been eating or sleeping properly’: Kin of Bengal man missing after Chennai floods

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

chennai flood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment