West Bengal | Supreme Court Of India | ஆசிரியர் பணி நியமன ஊழலில் மேற்கு வங்க அரசு அதிகாரிகளின் தொடர்பு குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) உத்தரவிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஏப்.29,2024) தடை விதித்தது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மே 6-ம் தேதி விசாரிப்பதாக அறிவித்தது.
மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ மேற்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்ட உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும் பெஞ்ச் கூறியதாக செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், சட்டவிரோத நியமனங்களுக்கு இடமளிக்கும் வகையில் சூப்பர் நியூமரரி பதவிகளை உருவாக்க மாநில அரசு ஒப்புதல் அளித்தது தொடர்பாக சிபிஐ கூடுதல் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று கூறியது.
மேலும், “தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க அரசு இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றம் "தன்னிச்சையாக" நியமனங்களை ரத்து செய்ததாகக் கூறியது.
"உயர்நீதிமன்றம் முழுத் தேர்வு செயல்முறையையும் ரத்து செய்ததை பாராட்டத் தவறிவிட்டது, இது போன்ற அவசரநிலையைச் சமாளிக்க மனுதாரர் அரசுக்குப் போதிய அவகாசம் கொடுக்காமல், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை உடனடியாகப் பணியில் இருந்து உடனடியாக நீக்குவதற்கு வழிவகுத்தது. கல்வி முறை ஸ்தம்பித்துள்ளது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Bengal recruitment scam: SC stays CBI probe into state govt officials’ role after 25,000 teachers lose jobs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“