மேற்கு வங்க மாநிலத்தில் தங்கள் திருமணத்தை ரத்த முகாம் ஏற்பாடு செய்து கொண்டாடிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேற்கு வங்க மாநில மிட்னாபூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தீப் ராய் மற்றும் ஸ்ரீலா மொண்டல் என்பவருக்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மிகவும் விமரிசையாக திருமணத்தை நடத்தாமல், சிறிய அளவில் ரத்த முகாம் அமைத்து திருமணத்தை நடத்தியிருக்கின்றனர். இதில், நண்பர்கள், உறவினர்கள் என 35 பேர் ரத்த தானம் அளித்தனர்.
மேற்கு வங்கத்தில் கோடை காலத்தில் ரத்த வங்கிகளில் ரத்தம் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். இதனைத் தடுக்க நம்மாலான பங்கை செலுத்த வேண்டும் என நினைத்த சந்தீப் ராய் மற்றும் ஸ்ரீலா மொண்டல் இருவரும் தங்கள் திருமணம் இறுதியானதிலிருந்தே யோசிக்க துவங்கியுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு இந்த எண்ணம் உதித்துள்ளது.
இத்தம்பதியரின் நல்லெண்ணத்தை பல்வேறு தரப்பினரும் வாழ்த்திவரும் நிலையில், மேலும் பல ஜோடிகள் இத்தகைய முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.