/indian-express-tamil/media/media_files/2025/06/05/QW6S6NLrw2oO2an2Qw9N.jpg)
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) ஐ.பி.எல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றவியல் கவனக்குறைவைக் காரணம் காட்டி ஆர்.சி.பி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ) மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டி.என்.ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
கர்நாடக உயர் நீதிமன்றம் இந்தச் சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது (சுயமாக விசாரணை மேற்கொண்டுள்ளது). இந்த துயர சம்பவத்திற்கான காரணங்கள், அதைத் தடுத்திருக்க முடியுமா மற்றும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சித்தராமையா, பெங்களூரு நகர துணை ஆணையர் தலைமையில் இந்தச் சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணையை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்.சி.பி, கே.எஸ்.சி.ஏ, காவல்துறை மற்றும் நிகழ்வு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ஆதரவளிக்க "ஆர்.சி.பி கேர்ஸ்" என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் ஆர்.சி.பி அறிவித்துள்ளது.
மேலும், எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் தடுக்கும் நோக்கில் மெகா நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கான புதிய நிலையான இயக்க நடைமுறையை (எஸ்ஓபி) கர்நாடக அரசு உருவாக்கும் என்று மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இங்குள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வரா, ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்த மைதானத்திற்கு அருகில் நெரிசலுக்கு வழிவகுத்த குறைபாடுகளை அடையாளம் காண அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.