Advertisment

4.9 லட்சம் சர்வதேச பயணிகள்; சென்னையை பின்னுக்குத் தள்ளி 3-ம் இடம் பிடித்த பெங்களூரு விமான நிலையம்

சர்வதேச விமான போக்குவரத்தில் பெங்களூரு விமான நிலையம் 3-ம் இடம் பிடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai second airport is expected to function from 2024

சென்னை சர்வதேச விமான நிலையம், அக்டோபரில் சர்வதேச பயணிகள் போக்குவரத்தில் பெங்களூருவிடம் மூன்றாவது இடத்தை இழந்தது. போதிய உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள், சர்வதேச விமானிகளை ஈர்க்க முடியாமல் சென்னை விமான நிலையம் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisment

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அக்டோபரில் 4.9 லட்சம் சர்வதேச பயணிகளைக் கையாண்டது, அக்டோபர் 2023 உடன் ஒப்பிடும்போது 24.3% வளர்ச்சியைப் பதிவுசெய்தது, சென்னையின் அண்ணா சர்வதேச விமான நிலையம் 4.5 லட்சமாக சரிவைப் பதிவுசெய்தது, இது அக்டோபர் 2023-ஐ விட 1.8% குறைவாகும். 

செப்டம்பரில் 4.3 லட்சம் சர்வதேச பயணிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த பெங்களூரு, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது, முறையே சென்னை மற்றும் கொச்சியை நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களுக்கு தள்ளியது.

தாய்லாந்தில் உள்ள புருனே மற்றும் ஃபூகெட் போன்ற இடங்களுக்கு புதிய சர்வதேச வழித்தடங்களை அறிமுகப்படுத்திய போதிலும், கடந்த சில மாதங்களில் அடிஸ் அபாபா, ஜெட்டா, இலங்கை மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் அதிகரித்த போதிலும், சென்னை விமான நிலையம் சர்வதேச பயணிகளின் வருகையில் சரிவு  கண்டுள்ளது. 

இருப்பினும், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சென்னை விமான நிலையம் முன்னிலை பெருகிறது. 2 லட்சம் பயணிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெருகிறது.

அந்த ஆறு மாதங்களில் சென்னை 33.63 லட்சம் சர்வதேச பயணிகளைக் கையாண்டது, பெங்களூரு 31.73 லட்சத்தைக் கையாண்டது.

டேபிள் டாப்பராக டெல்லி விமான நிலையம் உள்ளது. அக்டோபரில் 17.5 லட்சம் சர்வதேச பயணிகளைக் கையாண்டது, அதே நேரத்தில் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான மும்பை 12.5 லட்சம் சர்வதேச பயணிகளைக் கையாண்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment