Bengaluru city covid updates Tamil News: இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமெடுத்துள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிதம் உயர்ந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 48781 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலு 592 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
தொற்று பரவலை தடுக்கு கடுமையாக முயற்சி செய்து வரும் கர்நாடகா அரசு வரும் 24ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அம்மாநில தலைநகரான பெங்களூருவில் மிகக் கடுமையான காட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பெங்களூருவில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களை தகனம் செய்ய நகரில் 7 மாயனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த 7 மயானங்களிலும் இடம் கிடைக்காத நிலையில், புறநகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கிரானைட் குவாரியில் உடல்கள் தகனம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தொற்றுக்கு பலியானவர்களை அடக்கம் செய்வதற்காக தவரேகேரில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத கல்லறையை மீண்டும் பயன்படுத்த உள்ளதாக பெங்களூரு நகர மாவட்ட ஆணையர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
"கெட்டனஹள்ளியில் உள்ள கிரானைட் குவாரி சமீபத்தில் ஒரு மாயனமாக மாற்றப்பட்டது. இது இறந்தவர்களுக்கு கண்ணியமான தகனம் கிடைக்கும் என்பதை உறுதிசெய்கிறது. குவாரி தட்டையானது, நாங்கள் சுமார் 15 இரும்பு தளங்களை பைர்களுக்கு அமைத்துள்ளோம், ”என்று மஞ்சுநாத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
கெட்டனஹள்ளி மற்றும் தவரகேரே ஆகிய இரண்டு மாயனங்களும், பெங்களூருக்கு மேற்கே 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. நகர மையத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள கெட்டனஹள்ளியில் உள்ள புதிய தகன வசதி பெங்களூரிலிருந்து தினமும் 30 முதல் 40 உடல்களை தகனம் செய்து வருகிறது.
கர்நாடகாவில் கடந்த சனிக்கிழமையன்று 482 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் 285 மட்டும் பெங்களூரு நகரில் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை 346 இறப்புகளும், நேற்று 281 இறப்புகள் இறப்புகளும் பதிவாகியுள்ளன.
கெட்டனஹள்ளியில் செயல்பட்டு வரும் தகன மயானத்தை அரசே பராமரித்து வரும் நிலையில், சில சுயஉதவி குழுக்களும் உதவி புரிந்து வருகின்றனர். ஆனால் கிரானைட் குவாரியில் அமைக்கப்பட்டுள்ள தகன மயானத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லை கெட்டனஹள்ளிக்கு நியமிக்கப்பட்ட ஒரு பணியாளர் கூறினார்
"உடல்களை எரிக்க 25 இரும்பு தளங்கள் உள்ளன. நான் இதற்கு முன்பு மற்ற உள்ளூர் தகனங்களில் பணிபுரிந்தேன். பணிச்சுமை அதிகமானது, ஒவ்வொரு நாளும் அதிகமான உடல்கள் வந்து கொண்டிருக்கின்றன" என்று சுரேஷ் என்ற தற்காலிக பணியாளர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
மேலும், 'இறந்தவர்களின் உறவினர்களுக்கு அரசாங்கம் குடிநீர் மற்றும் கழிப்பறைகளை வழங்கியிருந்தாலும், மக்கள் காத்திருக்கக்கூடிய தங்குமிடங்கள் அல்லது பைர் மரத்தின் பதிவுகளை வைக்க ஒரு இடம் இதுவரை அமைக்கப்பட வில்லை' என்று சுரேஷ் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.