/indian-express-tamil/media/media_files/2025/01/23/4XIu5NRTtgm8FKKl93Dv.jpg)
பெங்களூரு நாய் வளர்ப்பாளர் குணசேகர் (30) கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழகப் பகுதியில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவரது நண்பரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான பிரிஜேஷ் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
குணசேகர் என்ற குணா, ஜனவரி 10ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் பாகலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாடிக்கையாளரிடம் பணம் வசூலிக்க சென்றுள்ளார். அதன் பின் அவரை காணவில்லை. ஜனவரி 12ஆம் தேதி அவரது மனைவி ஜோசபின் மேரி தன் கணவரை காண வில்லை எனப் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கைது செய்யப்பட்ட 35 வயதான பாடி பில்டர் பிரிஜேஷ், பாகலூரைச் சேர்ந்தவர் ஆவர். குணசேகரின் உறவினர்கள் மூலம் ஒரு நிதி நிறுவனத்தில் போலித் தங்கத்தை அடகு வைத்துள்ளார். நிறுவனம் மோசடியைக் கண்டறிந்ததும், பணத்தைத் திருப்பித் தருமாறு அல்லது போலீஸில் புகார் கொடுக்கப்படும் என குணசேகருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 10-ம் தேதி பிரிஜேஷிடம் பணம் கேட்டு குணசேகர் அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றபோது பிரிஜேஷ் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொருவர் உதவியுடன் குணசேகர் உடலை பிரிஜேஷ் தமிழ்நாட்டின் பென்னாகரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்துள்ளார். பிரிஜேஷ்க்கு உதவிய நபர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சந்தேக நபர்கள் உடலை எரித்துக் கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து, தமிழக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர், அவர்கள் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
சந்தேக நபர்கள் உடலைக் கொண்டு செல்வதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக இருந்தன, பின்னர் போலீசார் குணசேகரின் உடலை அந்த இடத்திலிருந்து மீட்டனர்.
இதுகுறித்து வடகிழக்கு காவல்துறை துணை ஆணையர் சஜீத் வி.ஜே செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரிஜேஷ் இதற்கு போலி தங்க நகை அடகு வைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவின் பாரதி நகர் காவல் நிலையத்தில் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என வழக்குப் பதிவு உள்ளது என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.