இந்திய போர் விமானம் மிராஜ் 2000 விபத்து: தீப்பிடித்து வெடித்ததில் 2 விமானிகள் பலி

Bengaluru aircraft crashes: மிகப்பெரும் அளவில் புகையை வெளியிட்டு வெடித்து சிதறியதாக ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தை சுற்றி வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல் விமான தளத்தில், இந்திய விமானப் படையின் மைரேஜ் 2000 என்ற போர் விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் சித்தார்தா நேகி மற்றும் சமர் ஆப்ரோல் என்ற இரு பயிற்சி விமானிகள் பயணித்தனர்.

எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்த இந்த மைரேஜ் 2000 விமானத்தில் தீ பற்றிக் கொண்டது. விமானிகள் அதிலிருந்து தப்பிக்க முயன்ற போதும், தீ அவர்களை விடவில்லை.
இதில் சடலமாக முதல் விமானியும், பலத்த தீ காயங்களுடன் இரண்டாவது விமானியும் மீட்கப்பட்டதாக, கூறிய அதிகாரிகள், பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது இரண்டாவது விமானியும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முதலில் விமானத்தில் சிறிய தீப்பொறி பறந்ததாகவும், பிறகு மிகப்பெரும் அளவில் புகையை வெளியிட்டு வெடித்து சிதறியதாக ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தை சுற்றி வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

விமானம் தீ பிடித்தது, பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close