ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் பெங்களூருவில் இருந்து காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் (12551) கவுகாத்தி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், காலை 11.54 மணியளவில் ரயிலானது நெர்குந்தி ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தடம்புரண்ட ரயில் வழித்தடத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.