புகழ்பெற்ற கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; 11 பேர் கும்பல் கைது

MBBS, BDS Fraud claiming to buy seats by 11 arrested: புகழ்பெற்ற கல்லூரிகளில் இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த 11 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் பல மாணவர்களும் பெற்றோர்களும் ஏமாந்திருக்கலாம் என்றும் அவர்கள் புகார் அளிக்க முன்வருவார்கள் என்று போலீசார் நம்பிக்கை.

NEET Exam fraud allegation in Kovai, NEET exam fraud Udith Surya, Udith Surya arrested, NEET fraud, NEET fraud allegation, நீட் தேர்வு ஆள்மாறாட்டம், கோவை தனியார் மருத்துவக் கல்லூரி, உதித் சூர்யா, kovai private medical college, directorate of medical college, directorate of medical council, NEET exam, MBBS admission
NEET Exam fraud allegation in Kovai, NEET exam fraud Udith Surya, Udith Surya arrested, NEET fraud, NEET fraud allegation, நீட் தேர்வு ஆள்மாறாட்டம், கோவை தனியார் மருத்துவக் கல்லூரி, உதித் சூர்யா, kovai private medical college, directorate of medical college, directorate of medical council, NEET exam, MBBS admission

MBBS, BDS Fraud claiming to buy seats by 11 arrested: புகழ்பெற்ற கல்லூரிகளில் இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த 11 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஜெய நகர் பகுதியில் மெரிட் வைஸ் கன்சல்டன்ஸி என்ற ஆலோசனை மையம் தொடங்கி புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பொய்யாக விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது ஒரு கும்பல். இது தொடர்பாக மத்திய குற்ற பிரிவு அதிகார்கள், ஸ்னேஹில், பவன் குமார், நிஷாந்த், குணால் குமார் சிங், முனீஷ், நிதின், டிங்கு மண்டல், கௌஷல் குமார், சீஜு டேனியல், ராகுல் சிங் மற்றும் அங்கித் குமார் சிங் ஆகியோரை நேற்று முன்தினம் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மெரிட் வைஸ் கன்சல்டன்ஸியில் இருந்தவர்கள், பெங்களூரு மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகளில் இருந்து பொறியியல், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள் பற்றிய தகவல்களை பெற்றுள்ளனர்.

இந்த கன்சல்டன்ஸியினர் அவர்களுடைய பெயர்கள் தொடர்பு எண்களின் பட்டியலைப் பெற்றவுடன் அவர்கள் இந்த மாணவர்களுடனும் அவர்களது பெற்றோர்களுடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மேலும், அவர்கள் விரும்பும் எந்தவொரு மருத்துவக் கல்லூரியிலும் பெயரளவு கட்டணத்தில் தங்களால் மாணவர்களை சேர்க்க முடியும் என்று கூறி விளம்பரம் செய்துள்ளனர். இவர்களுடைய வலையில் விழும் பெற்றோர்களிடம் ஒரு மாணவருக்கு ரூ.1லட்சம் என்ற வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் பேச்சைக் கேட்டு பணம் செலுத்திய பெற்றோர்கள் மெரிட் வைஸ் கன்சல்டன்ஸியை தொடர்புகொண்டு கேட்டப்போது மாணவர் சேர்க்கை நடைமுறை தாமதம் ஆகும் அவர்கள் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கைக்கு சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஒரு மாணவரின் பெற்றோர் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது அவர்கள் வெவ்வேறு காரணங்களைக் கூறி சமாதானம் செய்துவந்துள்ளனர். இறுதியில் இவர்கள் மோசடிப் பேர்வழிகள் என்பதை உணர்ந்த மாணவரின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த கன்சல்ண்டன்ஸியில் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அங்கே ரூ.1.18 லட்சம் பணம், ஒரு தனியார் கல்லூரியின் பெயரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு டிடி 11 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 11 பேர்கள் மீது மோசடிவழக்கில் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த கன்சல்டன்ஸி இதுவரை எவ்வளவு மோசடி செய்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் நிறைய மாணவர்களும் பெற்றோர்களும் ஏமாந்து இருக்கலாம் என்றும் அவர்கள் புகார் அளிக்க முன்வரலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெரிட் வைஸ் கன்சல்டன்ஸி மட்டுமல்ல இது மாதிரி நிறைய நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் கல்லூரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bengaluru police arrested 11 member gang for mbbs bds fraud claiming to buy seats

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com