Bengaluru police detain Vatal Nagraj : கர்நாடக பந்த் காரணமாக, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வரும் 22 விமானங்களும், வெளியூர் செல்லும் 22 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இது பயணிகளுக்கு முன்கூட்டி அறிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கர்நாடகா மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ள அத்திபெலே மற்றும் விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னட ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது.
Karnataka Bandh | Vatal Nagaraj wearing a burqa before he set out to protest
எனினும், சனிக்கிழமை (செப்.30) வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 12 மணிக்கு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என 2000க்கும் மேற்பட்ட கன்னட ஆதரவு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் பெங்களூருவில் கன்னட சலுவாலி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் கைதுசெய்தனர்.
பந்த் காரணமாக மாநில தலைநகரில் எந்தப் பேருந்துகளும் ஓடவில்லை. இதற்கிடையில், காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட நடிகர்கள் தர்ஷன், சிவராஜ்குமார், துருவா சர்ஜா, பூஜா காந்தி, துனியா விஜய் உள்ளிட்டோர் குருராஜ் மாநாட்டு மையத்தில் கூடினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“