Bengaluru Mystery Sound: கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில், இன்று பிற்பகல் 1.20 மணியளவில், திடீரென பெரும் விபத்து நடந்தது போன்ற சப்தம் எழுந்துள்ளது.
பலராலும் கேட்கப்பட்ட இந்த சப்தம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப்படையினரை தொடர்பு கொண்டு போர் விமானங்கள் நடமாட்டம் குறித்து பெங்களூரு போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் நடுவே ஒரு மெல்லிய திரை : கொரோனா பரவலை தடுக்க சண்டிகர் புது பாணி
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், விசாரணை நடந்து வருவதாகவும், அப்பகுதியில் ஏதேனும் போர் ஜெட் இயக்கம் நடந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும்படி விமானப்படையையும் கேட்டுக் கொண்டார். "மதியம் ஒரு மணி அளவில், மக்கள் அந்த சத்தம் கேட்டிருக்கிறார்கள். போர் விமானம் இயக்கம் பற்றி நான் விமானப்படையிடம்அறிக்கை கேட்டுள்ளேன்," என்று அவர் மதியம் 2 மணிக்குப் பிறகு indianexpress.com-யிடம் கூறினார்.
இடி போன்ற உணர்வுகள் போர் விமான நடமாட்டத்தின் போது மட்டுமே ஏற்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் இன்று பூகம்ப நடவடிக்கைகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கர்நாடக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை மையத்தின் (கே.எஸ்.என்.டி.எம்.சி) இயக்குநர் சீனிவாஸ் ரெட்டி தெரிவித்தார். "நில அதிர்வு அளவுகள் பொதுவாக ஒரு லேசான நடுக்கம் போது ஏற்படும் எந்த நில அதிர்வுகளையும் பதிவு செய்யவில்லை" என்றார்.
பழைய மெட்ராஸ் சாலை, உல்சூர், குண்டனஹள்ளி, எச்.ஏ.எல்., கம்மனஹள்ளி, குக் டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், கோரமங்கலா, ஓசூர் சாலை, சி.வி.ராமன் நகர், வைட்ஃபீல்ட் மற்றும் எச்.எஸ்.ஆர் லேஅவுட் ஆகியவற்றில் இந்த சப்தம்கேட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு மிரர் செய்தி நிறுவனம் தனது ட்விட்டரில், "இது பூகம்பம் அல்ல என்பதை KSNDMC உறுதிப்படுத்துகிறது. பெங்களூரில் பதிவான சப்தம் பூகம்பத்தின் காரணமாக இல்லை. பொதுவாக லேசான நடுக்கம் ஏற்படும் போது நில அதிர்வு எந்த நில அதிர்வுகளையும் பதிவு செய்யவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil