Bangalore: கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் வைட்ஃபீல்ட் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே உள்ளது. இந்த உணவகத்தில் மதியம் 1:30 மணியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Bengaluru Rameshwaram Cafe Blast Live Updates
இந்த குண்டு வெடிப்பில், உணவகத்தில் இருந்த 5 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதலில், உணவத்தில் சிலிண்டர் வெடித்ததா ? அல்லது வேறு ஏதேனுமா என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், புரூக்ஃபீல்டின் ராமேஸ்வரம் கஃபே பகுதியில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஹெச்ஏஎல், ஒயிட்ஃபீல்ட் மற்றும் இந்திராநகர் காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
"பிற்பகல் 1:05 மணியளவில் நாங்கள் குண்டுவெடிப்புச் சத்தத்தைக் கேட்டோம், கஃபே புகையால் சூழப்பட்டிருப்பதைக் காண நான் வெளியே வந்தேன். சில உள்ளூர்வாசிகளும் நானும் சுமார் 5-6 பேர் தீக்காயமடைந்தவர்களுக்கு உதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
30 நிமிடங்களுக்குப் பிறகுதான் தீயணைப்பு வாகனம் வந்தது. நெருப்பு இல்லை புகை மட்டும் தான் இருந்தது. ”என்று குண்டுவெடிப்பின் போது அப்பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
'சிலிண்டர் வெடிப்பு அல்ல' - உரிமையாளர் பேச்சு
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய புரூக்ஃபீல்ட் ராமேஸ்வரம் கஃபே உரிமையாளர் திவ்யா ராகவேந்திர ராவ், “எங்கள் அனைத்து சி.சி.டி.வி கேமராக்களையும் காவல்துறைக்கு அணுகியுள்ளோம். வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் உணவகத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட காரணத்தை கண்டறிய உள்ளனர். அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைக்கிறோம்."
கர்நாடக உள்துறை அமைச்சர் ஆய்வு
பெங்களூரு ராமேஸ்வரம் உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையில், அந்த இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் கஃபே உரிமையாளர் யார்?
ராமேஸ்வரம் கஃபே பெங்களூரில் உள்ள பிரபலமான தென்னிந்திய ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் ஆகும், இந்த நிறுவனம் அல்ட்ரான் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.
திவ்யா ராகவேந்திர ராவ் இந்த ஓட்டலின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். அதே சமயம் ராகவேந்திர ராவ் ராமேஸ்வரம் கஃபேயில் ஐ.டி.சி கிச்சன் தலைமை செயல்பாடுகளின் நிறுவனர் மற்றும் விளம்பரதாரர் ஆவார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் முன்னோடியாக கொண்டு, அவர் பிறந்த இடத்தின் பெயரால் ராமேஸ்வரம் கஃபே என்று உணவகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு சைவ உணவகம் ஆகும் இதன் கிளைகள் இந்திராநகர், ஜேபி நகர், புரூக்ஃபீல்ட், ராஜாஜிநகர் மற்றும் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூர் ஆகிய இடங்களில் உள்ளன.
VIDEO | Explosion reported at Rameshwaram Cafe in Bengaluru, several feared injured. More details awaited. pic.twitter.com/0GlTmNjSUD
— Press Trust of India (@PTI_News) March 1, 2024
இந்த நிலையில், இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். உபா வழக்கு பதியப்பட்டுள்ளது. காயமுற்ற 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.