கடைசி நாள் வேலைக்கு 'குட்பாய்’ சொல்ல குதிரையில் வந்த ஐடி ஊழியர்!

நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன். எட்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன்

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த ஐடி ஊழியர் ஒருவர், தனது கடைசி நாள் வேலைக்கு குட்பாய் சொல்ல குதிரையில் வந்து மாஸ் காட்டியது பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

பெங்களூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் இன்ஜினீயராக பணியாற்றி வந்தவர் தான் ரூபேஷ்குமார். இவர், நாள்தோறும் தனது வீட்டிலிருந்து பல மணி நேரம் பயணித்து வேலைக்கு சென்று வந்துள்ளார். பெங்களூர் நகரத்தில் நாள் தோறும் ஏற்படும் கடுமையான போக்குவரத்தி நெரிசல் காரணமாக ரூபேஷ் தினமும் லேட்டாக வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால், பலமுறை டீம் லீடரின் திட்டும் வாங்கியுள்ளார். இதனால் கடுப்பான ரூபேஷ்குமார். ஐடி வேலையை உதறி தள்ள முடிவெடுத்துள்ளார்.மேலும், சொந்தமாக ஒரு நிறுவனமும் தொடங்க திட்டமிட்டு வேலையை ராஜினமாவும் செய்துள்ளார். இதன்படி அந்த நிறுவனத்தில் ரூபேஷ்குமாருக்கு நேற்று கடைசி நாளாகும்.

தனது கடைசி நாள் பயணத்தை வித்யாசமாகவும், பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் குதிரை மூலமாக பயணித்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். `last working day as a software engineer’ என்ற பலகையை மாட்டிக்கொண்டு குதிரையில் அமர்ந்தப்படி ரூபேஷ்குமார் சென்ற ஃபோட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. ரூபேஷின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து விளக்கம் அளித்த ரூபேஷ் குமார், “ நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன். எட்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன் இந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். எனக்கும் நாட்டின் மீது அக்கறை உள்ளது.நானும் இந்த நாட்டின் குடிமகன் தான். இனி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நான் வேலை செய்ய மாட்டேன். சுய தொழில் துவங்க முடிவெடுத்துள்ளேன். குறிப்பாக பெங்களூர் நகரம் போக்குவரத்து நெரிசலால் நிறைந்துள்ளது. காற்று பெரிதளவில் மாசடைந்துள்ளது. அனைவரும் வாகனங்கள் உபயோகிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். இதை கூறும் வகையில் தான் குதிரையில் பயணம் செய்தேன்” என்று கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close