பாஜக வேட்பாளர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட 49 ஊடகங்களுக்கு நோட்டீஸ்

தற்போது சூர்யா குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.

தற்போது சூர்யா குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bengaluru South BJP candidate Tejasvi Surya

Bengaluru South BJP candidate Tejasvi Surya

Bengaluru South BJP candidate Tejasvi Surya : பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் தேஜஸ்வி சூர்யா. அவர் குறித்து அவதூறான மற்றும் தவறான கருத்துகளை பதிவு செய்வதாக கூறி ஆங்கில மற்றும் கன்னட செய்தி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

Bengaluru South BJP candidate Tejasvi Surya தொடுத்த வழக்கு

Advertisment

தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக 49 ஊடக நிறுவனங்கள் மீது மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து, டெக்கன் ஹெரால்ட் போன்ற ஆங்கில பத்திரிக்கை நிறுவனங்களும், ப்ரஜவனி, கன்னட ப்ரபா, விஜயகர்நாடகா, உதயவானி போன்ற கன்னட பத்திரிக்கை நிறுவனங்களும், டிவி9, சுவர்ணா நியூஸ் போன்ற கன்னட தொலைக்காட்சி நிறுவனங்களும், சி.என்.என். நியூஸ் 18, டைம்ஸ் நவ், இந்தியா டுடே, நியூஸ் எக்ஸ், ரிபப்ளிக் டிவி போன்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த பட்டியலில் அடக்கம்.

49 செய்தி நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் “எங்கள் வழக்குதாரர் பற்றி தவறான செய்திகளை பிரசுரிக்க உங்களுக்கு அதிகாரம் கிடையாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூர்யா மீடு விவகாரம் பெரிதாக ஆரம்பித்த காலத்தில் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளை காங்கிரஸ் கையில் எடுத்துக் கொண்டு சூர்யா இப்படியானவர் தான் என்று டெலிகாஸ்ட் செய்ய தொடங்கின.  இந்நிலையில், சூர்யா குறித்து புகார் அளித்த பெண் குறித்த விசாரனையை துரிதப்படுத்தக் கோரி மகிலா காங்கிரஸ், மாநில பெண்கள் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisment
Advertisements

தற்போது சூர்யா குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம்.

மேலும் படிக்க : கர்நாடகாவில் தமிழில் பேசி வாக்கு சேகரித்த நடிகர் பிரகாஷ் ராஜ்…

Bangalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: