Bengaluru Student raises pro-Pak slogans : பெங்களூருவில் நேற்று சி.ஏ.ஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி. அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சௌத் பெங்களூரு கல்லூரி மாணவி அமுல்யா லியோனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார். ஃப்ரீடம் பார்க்கில், எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற ஒரு இடத்தில் அவர் இவ்வாறு கோஷமிட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் கையில் இருந்து கட்டாயமாக மைக்ரோபோனை பறித்தனர் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்.
Bengaluru Student raises pro-Pak slogans
இந்த நிகழ்ச்சி பின்னர் குறித்து பேசிய ஓவைஸி “என்னுடைய நண்பர்கள் மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்ற பெரியவர்களே, எங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களுக்கும் சம்பந்தமில்லை. எனக்கோ, என் கட்சியினருக்கோ இங்கு நிகழ்ந்த எந்த சம்பவத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறினார். எங்கள் வாழ்நாள் முடியும் வரை பாரத் ஜிந்தாபாத் என்று தான் கூறுவோம். பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இனிமேலும் இருக்காது” என்று கூறினார். இந்த நிகழ்விற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் தங்களின் கண்டனங்களை கடுமையாக பதிவு செய்துள்ளனர். கர்நாடகா பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் தன்னுடைய அறிக்கையில் “இன்று சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், அமுல்யா லொயோனா என்ற பெண் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டுள்ளார். தேசதுரோகி போன்று செயல்பட்டுள்ளார். காவல்துறை இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் படிக்க : ராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள் – சென்னை சிஏ.ஏ. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ்
காங்கிரஸ், பாஜக கண்டனம்
ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் பெங்களூருவில், இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்ற போது, சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமுல்யா என்ற பெண் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கோஷமிட்டுள்ளார். சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டங்களை பாகிஸ்தானும், தேசதுரோக அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து நடத்த அதனை மேற்பார்வையிடுகிறது காங்கிரஸ் என்று பாஜக ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் பாகிஸ்தானுக்கே சென்றுவிடலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அமுலியாவின் இந்த செயல்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க : மகா சிவராத்திரி : ஈஷா மையத்திற்கு வருகை புரிகிறார் குடியரசு துணைத் தலைவர்!
மகராஷ்ட்ராவில் இருந்து வந்திருந்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதான் சமீபத்தில் பேசிய பேச்சும் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. சுதந்திரத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். கொடுங்கள் என்று கேட்க கூடாது. ஆனால் பறித்துக் கொள்ள வேண்டும். பெண்களை முன்னாள் வைத்து போராட்டங்களை நடத்துகின்றனர் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் பெண் புலிகள் வந்ததிற்கே வேர்க்க துவங்கிவிட்டீர்கள். நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாய் வந்தால் என்ன ஆவது. நாம் மொத்தம் 15 கோடி பேர் என பேசியுள்ளார். இந்த பேச்சுக்கும் கர்நாடக பாஜக பதில் அளித்துள்ளது.
அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டு அசாதி வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் 1947ல் இருந்து இவர்கள் சுதந்திரத்தையே அனுபவிக்கவில்லையா. வாரிஸ் பதான் போன்ற தலைவர்கள் தங்களின் ஔரங்கஷிப் மனநிலையில் இருந்து வெளியேற வேண்டும். இது போன்ற பேச்சுகள் எல்லாம் புது இந்தியாவில் எடுபடாது என்று அவர் அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"