Advertisment

பெங்களூரு: விமான கழிவறையில் புகைப் பிடித்த பெண் பயணி கைது; அதிரடி நடவடிக்கை

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு பறந்த இண்டிகோ விமானத்தின் கழிப்பறைக்குள் பெண் பயணி ஒருவர் புகைப் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.

author-image
WebDesk
New Update
Bengaluru: Woman ‘caught smoking’ inside flight toilet arrested Tamil News

A 24-year-old woman allegedly caught smoking in the toilet on an Indigo flight from Kolkata was arrested on her arrival in Bengaluru last week. (Reuters, file)

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு பறந்த இண்டிகோ விமானத்தின் கழிப்பறைக்குள் புகைப் பிடித்ததாக 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Advertisment

இது தொடர்பாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கே.சங்கர் அளித்த போலீஸ் புகாரின்படி, மார்ச் 5-ம் தேதி கொல்கத்தாவில் இருந்து இரவு 9.50 மணிக்கு இண்டிகோ 6இ-716 விமானத்தில் ஏறிய பிரியங்கா என்ற பெண் பயணி, விமானத்தின் கழிவறையில் புகைப் பிடித்ததாக சந்தேகமடைந்த கேபின் குழுவினர் கேட்டனர். அவர் கழிப்பறை கதவை திறக்க, கதவைத் திறந்து பார்த்தபோது, ​​குப்பைத் தொட்டியில் சிகரெட் கிடந்ததைக் கண்டு, பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விமானத்தில் இருக்கை எண் 17F இல் பயணித்த அவர் குறித்து பின்னர் கேப்டனிடம் புகாரளிக்கப்பட்டு, விமானம் பெங்களூரில் தரையிறங்கிய பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் விமான நிலைய காவல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 336 இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் (மனித உயிருக்கோ அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கோ ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அவசரமாக அல்லது அலட்சியமாக எந்தச் செயலைச் செய்தாலும்).

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 336 -ன் படி மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது 250 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இந்நிலையில், அந்த பெண் பயணி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

India Bangalore Indigo Indigo Airlines
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment