தீபாவளி கொடுத்த உற்சாகத்தில் தேர்தல் பரப்புரை, நடைபயணம் உள்ளிட்டவற்றை நிறுத்திவைத்து அரசியல் தலைவர்கள் தங்கள் வீடுகளில் உறவினர்களுடன் தீபாவளியை மகிழ்வாக கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட அரசியல் கட்சித் தலைவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் கன்னையா குமார் இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.
அமித் ஷா, நிதின் கட்கரி
இதற்கிடையில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு மத்தியில் தனது மருமகளை காண ஆவலுடன் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடுகிறார். மேலும் அவர் லட்சுமி பூஜையும் செய்தார். மறுபுறம் உள்துறை அமைச்சர் சனிக்கிழமை (அக்.22) தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
முன்னதாக அவர் குஜராத் பயணத்தில் இருந்தார். குஜராத் புத்தாண்டும் தீபாவளி தினத்தில் வருவதால் அவர் தற்போது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட வீடு திரும்பினார்.
ஜெ.பி., நட்டா
ஜெ.பி., நட்டா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் இருந்தார். இந்த நிலையில் வீடு திரும்பியுள்ள அவர் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட உள்ளார்.
ராகுல் காந்தி
பாரத் ஜோடோ யாத்திரையில் உள்ள ராகுல் காந்தி தீபாவளி விடுமுறையில் தனது மருமகளை பார்க்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கன்னையா குமார்
ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் உள்ள கன்னையா குமார் வீடு திரும்பவில்லை.
சச்சின் பைலட்
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாடினார். அவர் தனது வீட்டில் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
மேலும் தனது ஆதரவாளர்களுக்கும் தீபாவளி பரிசுப் பொருள்கள் வழங்கினார்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் காளிகட் அருகில் உள்ள ஹரிஷ் சட்டர்ஜி தெருவில் உள்ள அவரது வீட்டில் காளி பூஜை நடத்தினார்.
இந்த நிகழ்வை ஒவ்வொரு தீபாவளி தினத்திலும் மம்தா பானர்ஜி 1978ஆம் ஆண்டு முதல் இந்தப் பூஜையை நடத்திவருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார்.
அதேபோல் ஆம் ஆத்மி கல்ராஜ் எம்எல்ஏ அதிஷி, “மக்களுடன் மக்களாக தீபாவளி கொண்டாடினார். அப்போது இந்தத் தீபாவளி தினத்தில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.