பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்கும் விழா, பகத் சிங் கிராமமான கட்கர் கலனில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பகவந்த்தின் மகள் சீரத் கவுர் மான் (21) மற்றும் மகன் தில்ஷன் மான் (17) ஆகிய இருவரும், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளதாக குழந்தைகளின் தாயாரும், பகவந்த்தின் முன்னாள் மனைவியுமான இந்தர்பிரீத் கவுர் தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தகவல் தெரிவித்தார்.
பக்வந்த் மான் – இந்தர்ப்ரீத் கவுர் ஆகியோர் 2015 இல் பிரிந்தனர். பின்னர், இந்தர்ப்ரீத் கவுர் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார். ஆனால், பக்வந்த் ஆம் ஆத்மி கட்சியில் பஞ்சாப்பின் நலனுக்காக தீவிரமாக பணியாற்றி வந்தார்.
2014 இல், இந்தர்ப்ரீத் லோக்சபா தேர்தலுக்கான மானின் பிரச்சாரத்தின் முதுகெலும்பாக வளம் வந்தார். மான் முதல்முறையாக ஆம் ஆத்மி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்ரூர் கிராமங்களில் அவருக்காக பிரச்சாரம் செய்தார். இருப்பினும், 2015 இல் இந்த தம்பதி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மகத்தான வெற்றி குறித்து அமெரிக்காவில் இருந்தப்படி நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பேசிய இந்தர்பிரீத் கவுர், எங்கள் இரு குழந்தைகளும் இந்தியாவுக்கு வந்துவிட்டனர். அவர்கள் பகவந்த்தின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள். மிகுந்த உற்சாகத்துடனும் இருக்கிறார்கள்.
எப்போதும் அவருக்கு பின்னால் நின்று வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். என் தரப்பிலிருந்து அவரைப் பற்றி ஒருபோதும் தவறாகப் பேசியதில்லை.நாங்கள் இருவரும் தொலைவில் இருந்தாலும், அவரது வெற்றிக்காக பிராத்தனை செய்யவில்லை என்று அர்த்தம் கிடையாது. நான் இங்கே அமெரிக்காவில் வேலை மற்றும் குழந்தைகளின் படிப்பில் பிஸியாக இருந்தேன்” என்றார்.
மான் நேர்காணல்களில், பஞ்சாப் முழுவதுமே இப்போது தனது குடும்பமாக இருந்தாலும், வேலை முடிந்து திரும்பியவுடன் தனது வீடு காலியாக இருப்பதைக் காணும் போது மனம் கனக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் அவ்வப்போது சமூக வலைத்தளம் வாயிலாக தனது குழந்தைகளுக்கு அன்பை வெளிப்படுத்தி வந்தார். அவர்களது பிறந்தநாள்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தார்.
விவாகரத்து நடவடிக்கைகளின் போது, மான் எனது இரண்டு குடும்பங்களில்(சொந்த குடும்பம் அல்லது பஞ்சாப் குடும்பம்) ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. நான் பஞ்சாப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil