பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பகவந்த் சிங் மான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலன் கிராமத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பகவந்த் சிங் மான் தனது உரையை ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முடித்தார். அப்போது கூட்டத்தினரும் இன்குலாம் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டனர்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் சிங் மான் அறிவித்தபடி, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலனில் பகவந்த் சிங் மானின் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலன் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமானம் செய்து வைக்க பஞ்சாப் மாநிலத்தின் 18வது முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றுக்கொண்டார்.
முதலமைச்சராக பதவியேற்ற பகவந்த் மான், ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷமிட்டு, பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பகவந்த் மான் தனது முதல் உரையில், “முன்பு, அரண்மனைகளிலும், கிரிக்கெட் மைதானங்களிலும் பதவியேற்பு விழாக்கள் நடத்தப்படும். ஆனால், இந்த சுதந்திர தேசத்தை நமக்குக் கொடுத்தவர்களை நினைவுகூரவே, இந்த கிராமத்திற்கு வந்துள்ளோம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் நம் இதயங்களில் வீற்றிருக்கிறார்கள்.” என்று கூறினார்.
பகத் சிங் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போலவே ஆம் ஆத்மி கட்சியும் மக்களிடம் சுதந்திரத்தை எடுத்துச் செல்ல போராடுகிறது என்று பகவந்த் மான் கூறினார். எங்களுக்கு வாக்களிக்காதீர்கள், அவர்களுக்காகவும் நாங்கள் வேலை செய்வோம், ”என்று மான் மேலும் கூறினார்.
பகத் சிங் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போல ஆம் ஆத்மி கட்சியும் மக்களிடம் சுதந்திரத்தை எடுத்துச் செல்ல போராடுகிறது என்று கூறிய பகவந்த் மான், எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்காகவும் நாங்கள் பணியாற்றுவோம்” என்று கூறினார்.
பகவந்த் மான் கூறுகையில், “பகத்சிங், இந்தியா சுதந்திரம் பெறுவது பற்றி மட்டும் கவலைப்படவில்லை, சுதந்திரம் கிடைத்தது அதற்கு பிறகான அவரது கவலைகள் மதிப்பு மிக்கது. யாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றோமோ, அவர்களிடமே நாம் வெளிநாடு செல்கிறோம். நாம் நம்முடைய நாட்டில் தங்கி அதன் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்” என்று அவர் கூறினார்.
மேலும், நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த பகவந்த் மான், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயம், வணிகம், பள்ளிகள் என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். பகத்சிங்கின் வாசகமான, “அன்பு செய்வது அனைவரின் பிறப்புரிமை, நான் என் தேசத்தின் மண்ணை ஏன் காதலிக்கக்கூடாது?” என்று கூறி கேள்வி எழுப்பினார்.
“ஒரு நாள்கூட வீணாக்காமல், இன்றே வேலை தொடங்கும் என்று உறுதியளித்த பகவந்த் மான், பஞ்சாப் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளைப் பார்க்க டெல்லி செல்வது போல் மக்கள் பஞ்சாபிற்கும் வருவார்கள் என்றார். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ மற்றும் ‘ஜோ போலே சோ நிஹால்’ என்று தனது உரையை முடிக்கும் முன், பகவந்த் மான் மற்றொரு வசனத்தை மேற்கோள் காட்டினார்: “ஆட்சி என்பது இதயங்களை ஆள்பவர்கள், கிரீடங்கள் சேவல்களின் தலையில் கூட இருக்கும்” என்று கூறினார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பகவந்த் மான் பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்பு விழாவில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனிஷ் திவாரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பகவந்த் சிங் மானின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவையொட்டி, கட்கர் கலன் கிராமம் முழுவதும்இன்று மஞ்சள் தலைப்பாகை நிறத்தில் இருந்தது. பகத் சிங்கின் கிராமத்தில் பஞ்சாபின் 18வது முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றார். பகந்த்சிங்கின் மஞ்சள் தலைப்பாகை ‘பசந்தி’ தலைப்பாகை மற்றும் துப்பட்டாக்களை அணிந்து கொள்ளுமாறு ஆம் ஆத்மி கட்சி மக்களைக் கேட்டுக் கொண்டது. நவன்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பகத் சிங் நினைவிடம் அருகே 40 ஏக்கரில் மஞ்சள் திரைச்சீலைகள் மற்றும் 50,000 நாற்காலிகள் கொண்ட பந்தல்’ அமைக்கப்பட்டது. பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“