Advertisment

25 ஆண்டுகால அரசியலுக்கு முற்றுப்புள்ளி: ராஜஸ்தான் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு

தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைர்வா துணை முதல்வராகவும், வாசுதேவ் தேவ்னானி சட்டசபை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சராக முதல் முறையாக பாஜக சார்பில் எம்எல்ஏ ஆன பஜன்லால் சர்மா பதவியேற்கிறார்.

author-image
WebDesk
New Update
new Rajasthan Chief Minister

ராஜஸ்தான் புதிய முதலமைச்சராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த பஜன்லால் சர்மா தேர்வாகியுள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வாகி உள்ளார். அசோக் கெலாட் தலைமையிலான ஆளும் காங்கிரஸை வீழ்த்தி சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மாவை பாஜக செவ்வாய்க்கிழமை (டிச.12) நியமித்தது.

கெலாட் மற்றும் மூத்த பாஜக தலைவர் வசுந்தரா ராஜே மாறி மாறி மாநிலத்தை ஆளுவதை மட்டுமே மாநிலம் கண்ட 25 ஆண்டுகால போக்குக்கு இது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Advertisment

ராஜ்சமந்த் எம்எல்ஏ தியா குமாரி மற்றும் டுடு எம்எல்ஏ பிரேம் சந்த் பைர்வா துணை முதல்வராகவும், அஜ்மீர் வடக்கு எம்எல்ஏ வாசுதேவ் தேவ்னானி சட்டமன்ற சபாநாயகராகவும் இருப்பார்கள்.

ஜெய்ப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கட்சியின் மூன்று மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மற்ற இரண்டு பார்வையாளர்கள் வினோத் தாவ்டே மற்றும் சரோஜ் பாண்டே ஆவார்கள்.

56 வயதான சர்மா, ஜெய்ப்பூரில் உள்ள சங்கனர் சட்டமன்றத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனவர் ஆவார். அவர் காங்கிரஸின் புஷ்பேந்திர பரத்வாஜை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ராஜ்நாத்தின் அருகில் அமர்ந்திருந்த வசுந்தரா ராஜே, சர்மாவின் பெயரை முன்மொழிந்தார், அதை கட்சி எம்எல்ஏக்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஷர்மா, பாஜகவின் ராஜஸ்தான் பொதுச் செயலாளராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். அவர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் அரசியலில் எம்.ஏ படித்தவர் ஆவார். அவர் மீது கிரிமினல் வழக்கு ஒன்று உள்ளது. மேலும் அவரிடம் ரூ.1.4 கோடி சொத்து உள்ளது.

இவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மத்தியப் பிரதேசத்தில் ஓபிசி சமூகத்தை சேர்ந்த யாதவருக்கும், சத்தீஸ்கரில் பழங்குடி சமூக தலைவருக்கும் முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக தனது ராஜஸ்தான் பிரச்சாரத்தின் போது எந்த முதல்வர் வேட்பாளரையும் முன்னிறுத்தவில்லை என்றாலும், ராஜே மற்றும் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் அஷ்வினி வைஷ்னாவ் ஆகியோர் பதவிக்கு முன்னணியில் இருந்தனர். இந்த அறிவிப்பு முன்னாள் முதல்வர் ராஜேவின் பாதையின் முடிவையும் குறிக்கிறது.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் வாசிக்க : Bhajanlal Sharma named new Rajasthan Chief Minister

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bjp Rajasthan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment