திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் தொடர்பாக நடைபெற்று வரும் சலசலப்புக்கு மத்தியில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி - NCERT) இயக்குநர் தினேஷ் சக்லானி, ‘பாரத்’ மற்றும் ‘இந்தியா’ ஆகிய வார்த்தைகளை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க:
செய்தி நிறுவனமான பி.டி.ஐ.,க்கு அளித்த பேட்டியில், அரசியலமைப்புச் சட்டம் இவை இரண்டையும் ஆதரிக்கும் நிலையில், இந்த வார்த்தைகள் மீதான விவாதம் பயனற்றது என்று தினேஷ் சக்லானி வலியுறுத்தினார். என்.சி.இ.ஆர்.டி.,க்கு தங்கள் பாடப்புத்தகங்களில் ‘பாரத்’ அல்லது ‘இந்தியா’ என்று பயன்படுத்துவதில் எந்த வெறுப்பும் இல்லை என்றும் தினேஷ் சக்லானி கூறினார்.
“இது ஒன்றுக்கொன்று மாறக்கூடியது... நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது, அதை நாங்கள் ஆதரிக்கிறோம், இதுதான் எங்கள் நிலைப்பாடு. பாரதத்தைப் பயன்படுத்தலாம், இந்தியாவைப் பயன்படுத்தலாம், என்ன பிரச்சனை?” என்று தினேஷ் சக்லானி கேள்வி எழுப்பினார்.
சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பள்ளிப் பாடத்திட்டத்தைத் திருத்தியமைக்கும் பணியில் ஈடுபட்டு, கடந்த ஆண்டு அனைத்துப் பாடப்புத்தகங்களிலும் ‘இந்தியா’ என்பதை ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரைத்ததை அடுத்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
“வகுப்புகள் முழுவதும் உள்ள மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் பாரத் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. பாரதம் என்பது பழமையான பெயர். 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் பாரதம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று குழுத் தலைவர் சி.ஐ ஐசக் பி.டி.ஐ.,க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த வாரம் வெளிவந்த வந்த 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் NCERT விடுபட்டதையடுத்து சர்ச்சைக்குள்ளானது. புத்தகத்தில் பாபர் மசூதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை, அதற்கு பதிலாக அதை "மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு" என்று குறிப்பிடுகிறது, மேலும் அயோத்தி தொடர்பான பகுதியை நான்கிலிருந்து இரண்டு பக்கங்கள் வரை கத்தரித்து, முந்தைய பதிப்பில் இருந்து விவரங்களை நீக்கியது.
ஞாயிற்றுக்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், தினேஷ் சக்லானி குஜராத் கலவரம் மற்றும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த வன்முறை பற்றிய தகவல் நீக்கப்பட்டதை நியாயப்படுத்தினார், "சிலவற்றைத் தேர்ந்தெடுத்து குறிப்பிடுவது நல்லதல்ல" என்று ஒரு நிபுணர் குழு கருதுவதாகக் கூறினார்.
தினேஷ் சக்லானி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், அயோத்தி பிரிவில் உள்ள திருத்தங்கள் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் அமைந்ததாகவும், உச்ச நீதிமன்றத்தின் 2019 தீர்ப்புக்கு இடமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“