Bharat Bandh: இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் எஸ்பிஐ வங்கி தனது ஊழியர்களின் அளவான பங்கேற்பு இருக்கும் என்று உறுதிப்படுத்தியுதுள்ளது. எனவே, அதன் சேவைகளில் ஏற்படும் தாக்கம் மட்டுப்படுத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வங்கி கிளைகளிலும் ஏடிஎம்களிலும் ஜனவரி 8-ம் தேதி தொடர்ந்து இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு அமர அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எதிர்ப்பு அழைப்பு பத்து மத்திய தொழிற்சங்கங்களால் செய்யப்பட்டது. இது நாடு தழுவிய பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆறு வங்கி ஊழியர் சங்கங்களும் ஆதரவளித்துள்ளன. இதன் காரணமாக, பல இடங்களில் வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் ஊழியர்களை வேலை செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளனர்.
இந்திய வங்கி சங்கத்தினரால் (ஐபிஏ) வேலைநிறுத்தம் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) கடந்த வாரம் பங்குச் சந்தைகளுக்கு அறிவித்துள்ளது. இருப்பினும், வேலைநிறுத்தத்தில் தனது ஊழியர்களுக்கு அளவான பங்கேற்பு இருக்கும் என்று வங்கி உறுதியளித்துள்ளது. எனவே அதன் சேவைகளில் ஏற்படும் தாக்கம் மட்டுப்படுத்தப்படும்.
மற்றொருபுறம், பாங்க் ஆஃப் பரோடா வங்கி நாளை வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. அதன் பல கிளைகள் மற்றும் அலுவலகங்களின் செயல்பாடு குறைந்து போகலாம் அல்லது செயலிழக்கக்கூடும் என்று அந்த வங்கி கூறியுள்ளது. ஆனால் மொத்த வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.
முன்னதாக, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களிடம் நாளை வங்கியில் எந்த சாவியையும் கோரவோ ஏற்றுக்கொள்ளவோ கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது 2020 ஜனவரி 8-ம் தேதி எந்தவொரு எழுத்தர் வேலைகளையும் செய்ய வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க உத்தரவுக்கு எதிராக வங்கி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அரசுக்கு சொந்தமான 10 வங்கிகளை நான்காக இணைக்கும் திட்டத்தை திரும்பப் பெறக் கோரியுள்ளன. வேலை இழப்பு பயம் பிரதான கவலையாக உள்ளது. “மற்றொரு தற்செயலான பிரச்சினை ஊதிய திருத்தத்தை விரைவுபடுத்துவதாகும்” என்று ஏ.ஐ.பி.ஓ.ஏ-யின் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன் கடந்த வாரம் கூறினார்.
கடைசி ஊதிய திருத்தப் நடைமுறை 2017 இல் நடந்தாலும், வங்கி ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக ஐபிஏ மற்றும் வங்கி தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
வங்கி தொழிற்சங்கங்களைத் தவிர, ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, டி.யு.சி.சி, எஸ்.இ.டபில்யூ.ஏ, ஏ.ஐ.சி.சி.டி.யு, எச்.எம்.எஸ், சிஐடியு, ஏ.ஐ.யு.டி.யு.சி, எல்.பி.எஃப், யு.டி.யு.சி ஆகிய பத்து மத்திய தொழிற்சங்கங்கள் நாளைய போராட்டத்தில் பங்கேற்கின்றன. மேலும் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்த அழைப்பில் சுமார் 25 கோடி மக்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.