Bharat Bandh Today, 10th September 2018 Live Updates: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைமையில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பாரத் பந்த்-க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தற்கு ஆதரவு கொடுத்திருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் இயங்குகின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்குகின்றன. பள்ளிகளில் 10-ம் வகுப்பு உள்ளிட்ட சில வகுப்புகளுக்கு இன்று காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. எனவே இன்று பள்ளிக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் இருந்தனர்.
ஆட்டோக்கள் சில இடங்களில் முழுமையாக ஓடாததால் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமம் அடைந்தனர். எனினும் தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த பந்த் பெரிதாக பாதிக்கவில்லை. சில மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இன்று மாலை 3 மணி வரை இந்த பந்த் நடந்தது.
Bharat Bandh Today : தமிழகத்தில் திமுக, மதிமுக ஆதரவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் விளைவாக வரலாறு காணாத அளவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இதனையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ஆளும் மத்திய அரசை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க:
இந்த போராட்டத்திற்கு, காங்கிரஸ் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தமிழகத்தில் திமுக மற்றும் மதிமுக கட்சிகள் முன்வந்துள்ளது.
Bharat Bandh Today, Tamil Nadu LIVE UPDATES: பாரத் பந்த் குறித்த முழு விவரம்
3:40 PM: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை! பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள்.
பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது? கச்சா எண்ணெய் விலை $107 ஆக இருந்த போது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை $ 78 ஆக இருக்கும் போது விலை உயர்வு! ஏன்? ஏன்?' என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
3:15 PM: பீகாரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் 2 வயது சிறுமி ஒருவர் மரணம் அடைந்தார். பந்த் காரணமாக ஏற்பட்ட தாமதமே அவரது மரணத்திற்கு காரணம் என சர்ச்சை எழுந்திருக்கிறது. இது தொடர்பாக ராகுல் காந்தி மீது பாஜக புகார் கூறியிருக்கிறது.
ஆந்திராவில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
2:00 PM: பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்திற்கு எதிரான போராட்டம் நியாயமானது. மத்திய மாநில அரசுகள் வரி குறைப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
1:15 PM: பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘பெட்ரோல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. காங்கிரஸ் வன்முறை போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது’ என்றார்.
12:00 PM: டெல்லியில் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, ‘அனைத்து முக்கிய பிரச்னைகளுக்கும் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் நிலை, பெண்களுக்கு எதிரான கொடுமை பற்றி பேச மறுக்கிறார்’ என குறிப்பிட்டார்.
11:35 AM:புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் தமிழக அரசு பேருந்தின் மீது கல்வீசப்பட்டது. இதில் பஸ் கண்ணாடி நொறுங்கியது.
11:30 AM: முழுஅடைப்பு நடைபெறுவதையொட்டி சென்னை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
10:45 AM: தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையுடன் நிறுத்தப்பட்டன. அதே சமயம் தமிழகத்திற்குள் ஓடும் பேருந்துகள் இயங்குகின்றன.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்குகின்றன.
10:30 AM: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காட்டாத்துறையில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசித் தாக்கியதில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
10:00 AM: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டில் ரயில்மறியலில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சென்னை தாராபூர் டவர் அருகே மறியல் போராட்டம் #BharatBandh
Click to see more @ https://t.co/mhke1glfCb https://t.co/0cOo1aME0H
— CPIM Tamilnadu (@tncpim) 10 September 2018
9.32 am : டெல்லி ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடைபெறுகிறது.
9.12 am : குஜராத் மற்றும் மகாராஷ்திரா மாநிலங்களில் ஆங்காங்கே வன்முறை வெடித்தது. போராட்டத்தின்போது, குஜராத்தில் பாரூச் பகுதி மற்றும் மகாராஷ்திரா பூனா பகுதியில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது. பூனாவில் பேருந்து சக்கரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. குஜராத் பாரூச்ஹ் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
9.05 am : காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெரும் எதிர்ப்பு பேரணி காந்தி நினைவிடத்தில் இருந்து தொடங்கியது.
8.45 am : ஒடிசா மாநிலத்தில் சம்பல்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Odisha: Congress workers block a train in Sambalpur as #BharathBandh has been called by Congress and other opposition parties today over fuel price hike pic.twitter.com/7rXobOCT7L
— ANI (@ANI) September 10, 2018
8.30 am : கர்நாடகா மாநிலத்தில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கினாலும், போக்குவரத்தில் சிறிது இடையூறு ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
8.28 am : ஆந்திர பிரதேசம் விசாக்கப்பட்டினம் பகுதியில் சிபிஐ(எம்) கட்சியினர் கட்சி கொடிகளை ஏந்தி வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#BharathBandh: CPI(M) holds protest in #AndhraPradesh's Visakhapatnam against fuel price hike pic.twitter.com/qPLBF152Cl
— ANI (@ANI) September 10, 2018
8.25 am : பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்து வழக்கம் போல செயல்படுகிறது. கடைகள் அனைத்து திறக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
8.15 am : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இயங்குகின்றது.
8.10 am : தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தின் தாக்கம் குறைவாகவே உள்ளது. பேருந்துகள் அனைத்தும் இயல்பாகவே இயங்குகின்றன.
8.00 am : மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.