Advertisment

இந்தியா - பாரத் பெயர் மாற்றம்; வரலாற்றை மறைக்கும் முயற்சி - ராகுல் காந்தி தாக்கு

இந்தியா – பாரத் என்ற இரண்டு வார்த்தைகளில் எந்த சிக்கலும் இல்லை; முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை; பா.ஜ.க.,வுக்கும் இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – ராகுல் காந்தி

author-image
WebDesk
New Update
Rahul Gandhi

பாரிஸில் உள்ள சயின்சஸ் போவில் சர்வதேச ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி இயக்குநர் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜாஃப்லர்லாட் தலைமையில் நடைபெற்ற பொது உரையாடலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. (PTI புகைப்படம்)

இந்தியா மற்றும் பாரத் பெயர்கள் குறித்த அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், நாட்டின் பெயரை மாற்ற விரும்புபவர்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்தியாவின் போராட்ட வரலாற்றை மறுக்க முயல்வதாகவும், காலனி ஆதிக்கத்தின் வரலாறு வருங்கால சந்ததியினருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள முயல்வதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

பாரிஸில் உள்ள சயின்ஸஸ் போ பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​ பா.ஜ.க.,வை தாக்கி, ஆளும் கட்சிக்கும் இந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை ராகுல் காந்தி கூறினார். அவர்கள் எந்த விலை கொடுத்தேனும் அதிகாரத்தைப் பெறத் தயாராக இருக்கிறார்கள், அதிகாரத்தைப் பெற அவர்கள் எதையும் செய்வார்கள்அவர்கள் ஒரு சிலரின் ஆதிக்கத்தை விரும்புகிறார்கள், அதைத்தான் அவர்கள் செயல்படுத்த நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்து மதம் என்பது எதுவும் இல்லை,” என்று ராகுல் காந்தி கூறினார்.

வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸில், ராகுல் காந்தி, இந்தியா-பாரத் சர்ச்சையானது அரசாங்கத்தின் ஒரு பீதி எதிர்வினை, "அதானி விவகாரத்தில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப பிரதமரின் வியத்தகு, புதிய திசைதிருப்பல் தந்திரம்" என்று கூறினார்.

சனிக்கிழமை, அவர் ஒரு படி மேலே சென்றார்.

அரசியலமைப்பு உண்மையில் இரண்டு பெயர்களையும் பயன்படுத்துகிறதுஎனவே நான் உண்மையில் அங்கு ஒரு சிக்கலைப் பார்க்கவில்லை, இரண்டு வார்த்தைகளும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, ஆனால் நாங்கள் எங்கள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டதால் அரசாங்கத்தை சிறிது எரிச்சலடையச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது நாட்டின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளனர். இந்த விஷயங்கள் எப்படி என்று உங்களுக்குத் தெரியும். நாங்கள் எப்போது வேண்டுமானலும் எங்கள் கூட்டணிக்கு இரண்டாவது பெயரைக் கொடுக்கலாம்எனவே இது நோக்கத்தைத் தீர்க்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அவர்கள் விசித்திரமான வழிகளில் செயல்படுகிறார்கள்,” என்று ராகுல் காந்தி கூறினார்.

"மிகப் பெரிய விஷயம் ஒன்று நடக்கிறது, அதாவது பெயரை மாற்ற விரும்பும் மக்கள் அடிப்படையில் வரலாற்றை மறுக்க முயற்சிக்கின்றனர்." என்று ராகுல் காந்தி கூறினார்.

"நாம் விரும்பினாலும் பிடிக்காவிட்டாலும் சரி, நமக்கு ஒரு வரலாறு உண்டு. ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டோம், ஆங்கிலேயர்களுடன் போராடினோம், ஆங்கிலேயர்களை தோற்கடித்தோம். ஆங்கிலேயர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் ஆங்கிலேயர்களை விட இந்தியர்களால் ஆங்கிலம் அதிகமாக பேசப்படுகிறது. இது அவர்களின் மொழியை விட எங்கள் மொழி, நாங்கள் எங்கள் சொந்த வழியில் ஆங்கிலத்தைப் பேசுகிறோம். நாங்கள் அதைத் திருப்புகிறோம், அவர்கள் விரும்பாத வழிகளில் அதைத் திருப்புகிறோம். எனவே இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலம் உண்மையில் இங்கிலாந்தில் பேசப்படுவதை விட ஒரு வித்தியாசமான வெளிப்பாடு. இந்த ஆங்கிலத்தில் பொதிந்திருப்பது ஒரு பெரிய வரலாறு, நிறைய வலிகள், நிறைய மகிழ்ச்சி... கற்பனை, போராட்டம்... அத்துனை விஷயங்கள் பொதிந்துள்ளன, பெயரை மாற்ற விரும்புபவர்கள் அதை அழிக்க விரும்புகிறார்கள்,” என்று ராகுல் காந்தி கூறினார்.

நமது நாட்டின் வரலாறை நமது வருங்கால சந்ததிக்கு தெரியப்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. அது அவர்களை தொந்தரவு செய்கிறது. நமது வரலாற்றை ஏற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். 100-200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களால் நாம் ஆளப்பட்டிருந்தால் என்ன... சரி... அதைச் சமாளித்துவிட்டு முன்னேறுவோம்என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், "இந்துத்துவாவை" எங்கே வைப்பீர்கள் என்று கேட்டதற்கு, "நான் கீதையைப் படித்திருக்கிறேன், பல உபநிடதங்களைப் படித்திருக்கிறேன், பல இந்து புத்தகங்களைப் படித்திருக்கிறேன்... பா.ஜ.க கருதும் இந்து மதம் எதுவும் இல்லை. முற்றிலும் எதுவும் இல்லை. நான் எங்கும் படித்ததில்லை... எந்த ஒரு இந்து புத்தகத்திலும்... எந்த ஒரு கற்றறிந்த ஹிந்துவிடமிருந்தும், உன்னை விட பலவீனமானவர்களை பயமுறுத்த வேண்டும், தீங்கு செய்ய வேண்டும் என்று நான் கேள்விப்பட்டதில்லை,” என்று ராகுல் காந்தி கூறினார்.

எனவே இந்த யோசனை... இந்த வார்த்தை இந்து தேசியவாதிகள்... என்பது தவறான வார்த்தை. அவர்கள் இந்து தேசியவாதிகள் அல்ல. அவர்களுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் எந்த விலை கொடுத்தேனும் அதிகாரத்தைப் பெறுகிறார்கள், அவர்கள் அதிகாரத்தைப் பெற எதையும் செய்வார்கள், அவர்கள் இந்திய சாதிக் கட்டமைப்பிற்கும், எனது நாட்டின் சமூகக் கட்டமைப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க எதையும் செய்வார்கள். அவர்கள் ஒரு சிலரின் ஆதிக்கத்தை விரும்புகிறார்கள், அதைத்தான் அவர்கள் செயல்படுத்த நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்து மதம் என்பது எதுவும் இல்லை,” என்று ராகுல் காந்தி கூறினார்.

”பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.,வை விட எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர். இந்தியாவில் 60 சதவீதம் பேர் எங்களுக்கும், 40 சதவீதம் பேர் அவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள். எனவே பெரும்பான்மை சமூகத்தினர் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கிறார்கள் என்ற இந்த எண்ணம் தவறான கருத்து,'' என்று ராகுல் காந்தி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rahul Gandhi Bjp India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment