Advertisment

மார்ஷல் சாம் மானெக்ஷா-க்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை? இதுவரை உயரிய விருது பெற்ற ராணுவ அதிகாரிகளின் பட்டியல்

சமீபத்தில் முக்கிய நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவ வட்டாரத்தில், சாம் மானெக்ஷா, அவர்களுக்கு அதிக நாட்கள் உயர் பதவியை வகித்த பெருமை கொண்டவர் என்று விருது வழங்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் முக்கிய நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவ வட்டாரத்தில், சாம் மானெக்ஷா, அவர்களுக்கு அதிக நாட்கள் உயர் பதவியை வகித்த பெருமை  கொண்டவர் என்று விருது வழங்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Advertisment

ராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் வி.பி. மாலிக் கூறுகையில் “ டாகர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரதனா விருது வழங்கப்பட்டது மிகவும் முக்கியமானது. இது சரியாக வழங்கப்பட்டுள்ளது. இதுபோல எப்,எம் சாம் மானெக்ஷா என்பவரும் மிகவும் தகுதி வாய்ந்த நபர். இவர் நாட்டிற்காக பல்வேறு விஷயங்களை செய்துள்ளார் ” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சாம் ஹோர்முஸ்ஜி ஃபிராம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்ஷா (1914-2008) இந்திய ராணுவ வரலாற்றில் மிகவும் உயர்ந்த நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் ஜெனரல் மாலிக் சமூகவலைதள பதிவு பல்வேறு கருத்துகளை உருவாக்கி உள்ளது. இதை வரவேற்ற சிலர், ஏன் சிறந்த ராணுவ வீரருக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கூடாது என்று கேட்டுள்ளனர். இதுஒரு பக்கம் இருக்க,  ப்பீல்டு மார்ஷல் ( Field Marshal)  என்ற பதவியே தனித்தன்மை வாய்ந்ததுதான் என்றும், ஒட்டுமொத்தமாக 2 ப்பீல்டு மார்ஷல் மட்டும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.  சாம் மானெக்ஷா மற்றும் கே.எம் கரியப்பா ஆகியோர் ஆவர் . இந்திய விமானப்படையின் மார்ஷல் அர்ஜன் சிங்க் இதில் முக்கியமானவர்.

இந்நிலையில் ராணுவத்தை சேர்ந்த நபர்களுக்கு மற்ற முக்கிய விருதான பத்ம விபூஷன் , பத்ம பூஷன், பதம் ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. மார்ஷல் சாம் மானெக்ஷா அவர்களுக்கு  பத்ம விபூஷன் , பத்ம பூஷன் என்ற இரு விருதுகளும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து நாட்டிற்காக போராடிய ராணுவத்தினருக்கு கிடைத்த விருதைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

 பத்ம விபூஷன்

ஜெனரல் ஜே.என் செளதிரி மற்றும் இந்திய விமானப்படையின் மார்ஷல் அர்ஜன் சிங் ஆகியோருக்கு 1965 ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. பத்ம  விபூஷன் விருதை பெரும் முதல் ராணுவ அதிகாரிகள் இவர்கள்தான். இந்தியா – பாகிஸ்தான் போரை தொடர்ந்து இது வழங்கப்பட்டது.

ஜெனரல் பி பி குமாரமங்கலம்  என்பவர் 1966 முதல் 1969 வரை ராணுவ அதிகாரிகளின் தலைவராக இருந்தார். இவர் ஓய்வு பெற்ற பிறகு இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

இதுபோல லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்-க்கும்  பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இதுபோல இவருக்கு பத்ம பூஷன் விருது 1965ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

விமானப்படை சீப் மார்ஷல் பி.சி லால், 1972ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போரில் இவர் எல்லா விமானப்படை வீரர்களுக்கு தலைவராக இருந்தார்.

நேவல் சீப் அட்மிரல் எஸ் எம் நந்தாவுக்கும் பத்ம விபூஷன்  விருது வழங்கப்பட்டது. விமானப்படை சீப் மார்ஷல் ஒ.பி மெஹ்ராவுக்கு 1977ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. ஜெனரல் ஏ.எஸ் வைத்தியாவிற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தீவிரவாதிகளால் இவர் பூனேவில் கொலை செய்யப்பட்ட பிறகு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் சிறந்த விமான ஓட்டுநர் என்பதற்காக குரூப் கேப்டன் சுரன்ஜன் தாஸ்-க்கு 1970ம் ஆண்டு  பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் HAL HF-24 என்ற ராணுவ விமானத்தை சோதனை முறையில் ஓட்டும்போது மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

Read in English

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment