Advertisment

விநாயகர் சிலை கரைப்பின்போது சோகம் : படகு கவிழ்ந்து 11 பேர் பலி

Bhopal Boat Accident During Ganpati Visarjan: மத்திய பிரதேச மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பு சம்பவத்தின் போது படகு கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bhopal Ganpati Visarjan, Bhopal Ganpati Visarjan Boat Accident

ganesh visarjan, ganesh visarjan bhopal, ganesh visarjan accident, ganesh visarjan bhopal news, bhopal ganesh visarjan,bhopal ganesh visarjan news, bhopal ganesh visarjan accident, bhopal ganesh visarjan boat accident, bhopal news, bhopal boat accident news, bhopal latest news, போபால், படகு விபத்து, பலி, விநாயகர் சிலைகள் கரைப்பு, முதல்வர் கமல்நாத், மத்தியபிரதேசம்

Bhopal Ganesh Visarjan Boat Accident: மத்திய பிரதேச மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பு சம்பவத்தின் போது படகு கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்திய பிரதேச மாநிலம் போபாலையடுத்த கட்லபுரா ஏரியில், விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பி சி சர்மா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அப்போது சிலைகளை கரைப்பதற்காக, படகுகளில் ஏற்றி விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. சிலையின் பாரம் தாங்காமல் படகு படகோட்டியின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மற்ற படகுகளோடு மோதியது. படகுகள் தண்ணீரில் மூழ்கிய சம்பவத்தில், அந்த படகுகளில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் தலைமையில் நீதிவிசாரணை நடத்த ம.பி. முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment