மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகவும், மணிப்பூரில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலின் பாஜகவின் மேற்பார்வையாளராக இருக்கும் பூபேந்தர் யாதவ், ஞாயிற்றுக்கிழமை மணிப்பூருக்கு சென்ற போது, தனது இரண்டு பணிகளையும் திறம்பட கையாண்டார்.
தேர்தல் தொடர்பாக கட்சி வேலைகளை தவிர, லோக்டாக் ஏரிக்கான திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் தொடர் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தினார்.
முதலில், மணிப்பூர் சுற்றுச்சூழல் அமைச்சர் அவாங்போ நியூமையுடன், லோக்டாக் மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், எம்பி மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்தார்.
பின்னர், மீனவர்கள், சுற்றுச்சூழல் சுற்றுலா வணிகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் ஆலோசனைக்கு அழைத்தார்.லோக்டக்கிற்கான ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தாக கூறப்படுகிறது.
பெண்ணின் ஒற்றை குரல்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தனது குழந்தை திருமணத் தடை (திருத்தம்) மசோதா 2021ஐ நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனால், பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 18 முதல் 21 ஆக உயர்த்துவது தொடர்பான மசோதா குறித்து ஆய்வு, பெரும்பாலும் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. 31 பேர் கொண்ட நிலைக்குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் டிஎம்சி எம்பி சுஷ்மிதா தேவ் மட்டுமே உள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் நிபுணர்கள் மற்றும் சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் ,இத்தகைய மசோதாவை ஆராயும் குழுவில் அதிகமான பெண் எம்.பி.க்கள் இருக்க வேண்டும் என்று முன்பு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
வருண் காந்தியின் புத்தாண்டு கொண்டாட்டம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடும் சமயத்தில், அவரது உறவினரும் பாஜக எம்பியுமான வருண் காந்தி, தனது தொகுதியான பிலிபிட்டில் அதிகாரிகளின் ஏற்படுத்தியுள்ள ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆராய இந்தாண்டின் முதல் நாளை செலவழித்தார்.
சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆன்லைளில் கலந்தாலோசித்தார். அப்போது, மாஸ்க் அணிந்து பலருக்கு முன்னுதாரணமாக விளங்கியதற்காக பாராட்டுகளை பெற்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil