Advertisment

நாளை பைடன்- மோடி பேச்சுவார்த்தை: குடியரசு தின விழாவிற்கு குவாட் தலைவர்களை அழைக்கும் இந்தியா

நாளை (வெள்ளிக்கிழமை) இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

author-image
WebDesk
New Update
Prime Minister Narendra Modi with US President Joe Biden.jpg

Prime Minister Narendra Modi with US President Joe Biden

டெல்லியில் செப்.9-10 தேதிகளில் ஜி20 தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது. முன்னதாக நாளை (வெள்ளிக்கிழமை) இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.  தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக குவாட் அமைப்பு தலைவர்களை அழைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது. 

Advertisment

ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகிய தலைவர்களின் இருப்பை (Availability of the leaders) உறுதி செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

குடியரசு தின விருந்தினர்களை உறுதி செய்ய டெல்லியில் விருந்து நிகழ்ச்சி மூலம் அரசாங்கம் வியூகம் வகுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தலைமை விருந்தினரின் தேர்வு பல காரணங்களால் கட்டளையிடப்படுகிறது. வணிக ஆர்வம் மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் ஆகிய காரணங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் தலைவர்களின் இருப்பை அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னரே முறையான அழைப்பிதழ் 
அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குவாட் குழுவின் மூன்று தலைவர்களும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு வருவார்கள் என்பதால் இந்திய தரப்பு அந்த வழிகளில் செயல்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த ஆண்டு குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை நடத்துவது இந்தியாவின் முறை.

தற்போதைய நிலவரப்படி, மூன்று தலைவர்களும் பிஸியான கால அட்டவணையில் உள்ளனர்.  2024-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்க தேர்தல் வர உள்ள நிலையில் பைடன் அதற்கான பணிகளில் ஈடுபட உள்ளார். மேலும் தேர்தலுக்கு முன்னதாக ஜனவரி மாதம் அவரின் கடைசி மாநில உரையாக இருக்கும்.

ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் தேசிய தினத்தை ஜனவரி 26 அன்று கொண்டாடுகிறது, ஏனெனில் இது தீவுக் கண்டத்தில் முதல் நிரந்தர ஐரோப்பிய குடியேற்றத்தை நிறுவியதைக் கொண்டாடுகிறது. அல்பானீஸ் மக்கள் குடியரசு தினத்தைப் போன்ற பொது கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்களில் பிஸியாக இருப்பார்கள்.

ஜப்பானில் வழக்கமாக ஜனவரி கடைசி வாரத்தில் டயட் (பாராளுமன்றம்) கூட்டம் நடத்தப்படும்.  மேலும் பட்ஜெட் அமர்வின் முதல் வாரங்களில் பிரதமர் கிஷிடா அங்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜப்பானில் அடுத்த ஆண்டு 150 நாள் அமர்வு ஜனவரி 23 முதல் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து குவாட் தலைவர்களையும் ஒன்றிணைக்கும் இந்த திட்டம் செயல்பட்டால், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்  முட்டுக் கட்டை போடும் சீனாவிற்கு இது ஒரு வலுவான சமிக்ஞையாக இருக்கும்.

பைடன் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இன்று அமெரிக்காவில் இருந்து புறப்படுகிறார். அவர் வெள்ளிக்கிழமை மோடியுடன் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார் மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், "வளர்ந்து வரும் சந்தை பங்குதாரர்களுடன் இணைந்து பெரிய விஷயங்களை ஒன்றாக வழங்குவதற்கு பைடன் உறுதியுடன் இருப்பதாக கூறினார். 

மேலும் இந்த வார இறுதியில் இந்தியாவின் டெல்லியில்  உலகம் அதைக் காணும் என்றும் கூறினார். டெல்லியில் நடைபெறும் உச்சிமாநாடு உலகின் முக்கிய பொருளாதாரங்கள் சவாலான நேரங்களிலும் ஒன்றாகச் செயல்பட முடியும் என்பதைக் காண்பிக்கும்.  

எனவே, நாங்கள் டெல்லி செல்லும்போது, ​​வளரும் நாடுகளுக்கு வழங்குவதில் எங்கள் கவனம் இருக்கும்; காலநிலை முதல் தொழில்நுட்பம் வரை அமெரிக்க மக்களுக்கு முக்கிய முன்னுரிமைகளில் முன்னேற்றம்; மற்றும் G20க்கான எங்கள் அர்ப்பணிப்பை ஒரு மன்றமாக காட்டுவது, நான் முன்பு கூறியது போல், உண்மையில் வழங்க முடியும்" என்று கூறினார். 

“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Joe Biden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment