/indian-express-tamil/media/media_files/e2PpKwJcCzVE8EJntYli.jpg)
டி.ஆர்.ஜி என்பது சரணடைந்த நக்சலைட்டுகளை உள்ளடக்கிய ஒரு சிறப்புப் படையாகும். (File photo/ Representational)
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்கவுன்டரில் 30-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: In biggest encounter in state’s history, over 30 Maoists gunned down in Chhattisgarh
காவல்துறை கூறுகையில், தண்டேவாடா மற்றும் நாராயண்பூரில் இருந்து மாவட்ட ரிசர்வ் காவலர்கள் (டி.ஆர்.ஜி), அபுஜ்மத் என்ற இடத்தில் நக்சலைட்டுகள் இருப்பதாக குறிப்பிட்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், வெவ்வேறு போலீஸ் முகாம்களில் இருந்து நடவடிக்கை எடுத்தனர். டி.ஆர்.ஜி என்பது சரணடைந்த மாவோயிஸ்டுகளை உள்ளடக்கிய ஒரு சிறப்புப் படையாகும்.
“கோவல் - நெந்தூர் - துல்துலி ஆகிய மூன்று கிராமங்களைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்தது” என்று காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கிராமங்களும் தண்டேவாடாவில் அபுஜ்மத் என்ற இடத்தில் உள்ளன.
வட்டாரங்கள் கூறுகையில், ஏகே 47 துப்பாக்கி மற்றும் ரைபிள்ஸ் (எஸ்.எல்.ஆர்) போன்ற ஆயுதங்களுடன் ஏழு உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தனர்.
இந்த ஆண்டு நக்சல் வன்முறையில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 15 பாதுகாப்புப் படையினர் மற்றும் 47 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
கோவாவின் பரப்பளவில், அபுஜ்மத் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்படுகிறது. பல்வேறு நடவடிக்கைகளில் 50 சதவிகிதம் அல்லது சுமார் 4000 சதுர கிலோமீட்டர் நிலத்தை மீட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.
மாநிலத்தின் கடைசி பெரிய என்கவுன்டர் செப்டம்பர் 3 அன்று, தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் 6 பெண்கள் உட்பட 9 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.