/tamil-ie/media/media_files/uploads/2020/09/10-7.jpg)
bihar assembly election bihar election date
bihar assembly election bihar election date : பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பீகாரில் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதி முடிவடைவதால் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது.3 கட்டங்களாக பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட் வாக்குப் பதிவு அக்டோபர் 28ந-ந் தேதி நடைபெறும்; 2-வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 3, 3-வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். 3 கட்டங்களில் பதிவான அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சுனில் அரோரா பேசியதாவது, “ இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான பீகார் தேர்தலுக்கு மிகப்பெரிய ஏற்பாடு செய்ய வேண்டும். பீகார் சட்டமன்றத்தின் ஆயுள் காலம் நவம்பர் 29 உடன் முடிவடைகிறது. பீகாரின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.29 கோடி.பீகார் தேர்தலுக்கு 1,89,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் அமைக்கப்படும். பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இருப்பினும், இது இடதுசாரி ஆயுதக் குழுக்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது. வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கவச உடை, முகக்கவசம், சானிடைசர் வழங்கப்படும் ” என தெரிவித்தார்.
சுமார் 46 லட்சம் முகக்கவசங்கள், 6 லட்சம் PPE கருவிகள், 6.7 லட்சம் யூனிட் ஃபேஸ்-ஷீல்டுகள், 23 லட்சம் (ஜோடி) கை கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்காளர்களுக்கு, 7.2 கோடி ஒற்றை பயன்பாட்டு கை கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.