Advertisment

75% இட ஒதுக்கீடு; பீகார் அமைச்சரவை ஒப்புதல்: நிதிஷ் அரசு அதிரடி

பீகார் மாநில அமைச்சரவை 60 சதவீத இடஒதுக்கீட்டை (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீதம் உட்பட) 75 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Bihar cabinet increase quota 75% and reservation Bill likely in current Assembly session Tamil News

75 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா தற்போது நடைபெறும் பீகார் சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.

Bihar | nitish-kumar | reservation Bill: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் அண்மையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த அறிக்கையை சட்டசபை மற்றும் கவுன்சிலில் தாக்கல் செய்ய இருப்பதாகவும், மாநிலத்தில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உள்ளதாகவும் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து இருந்தார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Bihar cabinet nod to increase quota to 75%, reservation Bill likely in current Assembly session

அவர் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீகார் மாநில அமைச்சரவை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 60 சதவீத இடஒதுக்கீட்டை (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீதம் உட்பட) 75 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த இடஒதுக்கீடு மசோதா தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், மாதம் ரூ. 6,000க்கும் குறைவான வருமானம் உள்ள 94 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் ஐந்தாண்டுகளுக்கு வழங்கவும், 67 லட்சம் நிலமற்ற குடும்பங்களுக்கு ஒரு முறை ரூ.1 லட்சம் வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால், மாநில அரசின் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட உள்ளது. 

முன்மொழியப்பட்ட இடஒதுக்கீடு மசோதா, தற்போதுள்ள 10 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஒதுக்கீட்டைத் தவிர, ஓ.பி.சிகளுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டையும், ஈ.பி.சிகளுக்கு 25 சதவீதத்தையும், பட்டியலிட்ட சாதி பிரிவினருக்கு (எஸ்.சி) 20 சதவீதத்தையும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (எஸ்.சி) 2 சதவீதத்தையும் வழங்க வாய்ப்புள்ளது. ​​

பீகார் மாநிலங்களில் தற்போது 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழக்கத்தில் உள்ள நிலையில், அதில், எஸ்.சி-க்கு 14 சதவீதம், எஸ்.டி-க்கு 10 சதவீதம், ஈ.பி.சி-க்கு 12 சதவீதம், ஓ.பி.சி-க்கு 8 சதவீதம், பெண்கள் மற்றும் பொது பிரிவில் உள்ள ஏழைகளுக்கு தலா 3 சதவீதம் வழங்கப்படுகிறது. அதனுடன் 10 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஒதுக்கீட்டை சேர்த்தால், தற்போதைய ஒதுக்கீடு 60 சதவீதமாக வருகிறது.

சுமார் 13 கோடி பீகார் மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள் (ஒரு நாளைக்கு ரூ.200 அல்லது ஒரு மாதத்தில் ரூ.6,000க்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள்) என்று கணக்கெடுப்பு அறிக்கை காட்டுகிறது.

“ஒதுக்கீட்டை அதிகரிப்பதை முதல்வர் சுட்டிக்காட்டியதால், இடஒதுக்கீடு மசோதா, 2023 இன் வரைவு, சட்ட மற்றும் அரசியலமைப்பு நிபுணரின் ஆலோசனையுடன் தயாராகி வருகிறது”. என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அரசு அதிகாரி கூறினார். 

செவ்வாய்கிழமை சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், “ஓ.பி.சி மற்றும் ஈ.பி.சி மக்கள் தொகை 63 சதவீதமாகிவிட்டதால், 65 சதவீத ஒதுக்கீட்டைக் கருத்தில் கொள்வோம். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளித்து வருவதால், தற்போதுள்ள தனி ஒதுக்கீட்டில் அர்த்தமே இருக்காது. அதேபோல், 10 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் ஒதுக்கீடு நடைமுறையில் உள்ள நிலையில், பொதுப் பிரிவினரிடையே உள்ள ஏழைகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு என்பது பொருத்தமற்றது”. என்று கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Nitish Kumar Bihar Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment